Published : 26 Mar 2019 08:48 PM
Last Updated : 26 Mar 2019 08:48 PM

பிரியங்கா காந்தி ராம பக்தையாகி விட்டாரா? - ஸ்மிருதி இரானி கேலி

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மீது விமர்சனம் தொடுத்த பாஜக-வின் ஸ்மிருதி இரானி, பிரியங்கா திடீரென ராம பக்தையாகி விட்டாரா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ராமர் கடவுள் என்பதை நம்பாத காங்கிரஸ் கட்சியினர் இன்று ராம பக்தர்கள் ஆகிவிட்டனரா?  என்று கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

“நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்த காங்கிரஸ் ராமர் என்ற கடவுள் இல்லவே இல்லை என்று தெரிவித்தது. ஆனால் இன்று பிரியங்கா காந்தி ராமபக்தையாகி விட்டார்” என்று கேலி செய்துள்ளார்.

 

2007-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏ.எஸ்.ஐ. தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறும்போது  வரலாற்று ரீதியாகவோ, விஞ்ஞான ரீதியாகவோ ராமர் இருந்ததற்கான சாட்சியங்கள் இல்லை என்று தெரிவித்தது.

 

இதைத்தான் தற்போதைய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தியை கேள்வி கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x