Last Updated : 29 Mar, 2019 03:25 PM

 

Published : 29 Mar 2019 03:25 PM
Last Updated : 29 Mar 2019 03:25 PM

பேப்பர் கப்பில் நானும் காவலாளி விளம்பரம்: அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே துறை

சதாப்தி ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பையில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசரஅவசரமாக அந்த கோப்பைகளை ரயில்வே வாபஸ் பெற்றது.

புதுடெல்லியில் இருந்து, உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர், சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகித கோப்பையில், பிரதமர் மோடி சமீபத்திய முழக்கமாக " நானும் காவலாளி" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

நாட்டில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ரயில்வே துறைசார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தேநீர் கோப்பையை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படமும், காத்கோடகம் சதாப்தி ரயிலில் வழங்கப்பட்டது என்கிற வாசகமும் வைரலானது.

இதையடுத்து, இந்த விவகாரம் ரயில்வேதுறை அதிகாரிகளின்  பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் சங்கல்ப் அமைப்பு என்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த கோப்பைகள் வழங்கப்பட்டன என்று தெரிவி்க்கபட்டது. இதையடுத்து உடனடியாக நானும் காவலாளி என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட அனைத்து காகித கோப்பைகளையும் ரயில்வே அதிகாரிகள் அவசரஅவசரமாக வாபஸ் பெற்றனர்.

மேலும் ஐஆர்சிடிசி செய்தித்தொடர்பாளர்  கூறுகையில், " இதுபோன்ற வாசகங்கள் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி, எங்களை அறியாமல் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது. இந்த காகித கோப்பைகளை சப்ளை செய்த சேவைதாரருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது " என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x