Last Updated : 05 Mar, 2019 07:17 AM

 

Published : 05 Mar 2019 07:17 AM
Last Updated : 05 Mar 2019 07:17 AM

தீவிரவாதம் மூலம் நாட்டை அழிக்க முயல்பவர்களை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது: குஜராத் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்; எதிர்க்கட்சிகள் மீதும் விமர்சனம்

தீவிரவாதம் மூலம் இந்தியாவை அழிக்க முயல்பவர்களைப் பார்த் துக் கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசினார்.

அகமதாபாத் நகரில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள் ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் துக்கு நேற்று வந்தார். அப்போது ஜாம்நகரில் நடைபெற்ற பாஜக பேரணி, பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

2014-ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு நல்லத் திட்டங்களை அரசு அமல் படுத்தி வருகிறது. தீவிரவாதம் என் னும் நோயை முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டுமென்று நமது தேசமே விரும்புகிறது. நான் உங் களை ஒன்று கேட்க விரும்புகிறேன், நமது படைகள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்தானே?

என்னையும் சேர்த்து நாம் அனை வருமே நமது படைகள் மீது கேள்வி கள் கேட்காமல் நம்பிக்கை வைக்க வேண்டுமா, இல்லையா?

தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் துணையாக நிற்கிறது. அதை வேர றுக்க இந்தியா முயன்று வருகிறது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுச் செயல்களை பார்த்துக் கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது என்பதை நினைவில் கொள் ளுங்கள்.

பாகிஸ்தானின் பாலகோட்டில் நடந்த தாக்குதலில் நமது விமானப் படைகள் இலக்கை சரி யாகத் தாக்கின. இதில் தவறு ஏதும் நிகழவில்லை. தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் இருக்கிறது. எனவே, தீவிரவாதத் தின் ஊற்றுக்கண்ணை நாம் நீக்க வேண்டாமா?

தீவிரவாதம் மூலம் இந்தியாவை அழிக்க முயல்பவர்களைப் பார்த் துக் கொண்டு இந்தியா அமைதி யாக இருக்காது.

பாகிஸ்தான் தொடர்ந்து தீவிர வாதத்துக்கு ஆதரவு அளித்து வரு கிறது. பாகிஸ்தானின் பாலகோட் டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். நமது விமானப் படையிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் சூழ்நிலையே வேறுமாதிரி இருந் திருக்கும். எதிர்தரப்பில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார் கள். ஆனால் சிலருக்கு இதெல்லாம் புரியவில்லை. அப்போது நமது விமானங்களையும் இழந்திருக்க மாட்டோம் என்றுதான் நான் கூட்டத்தில் பேசினேன்.

எதிர்க்கட்சிகள் ஏளனம்

ஆனால், விமானப் படை தாக்கு தல் குறித்தே மோடி கேள்வி கேட் கிறார் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பேசுகின்றன. கேள்வி எழுப்பும் முன்பு தங்களது பொது அறிவை அவர்கள் பயன்படுத்தட்டும்.

நான் பேசியதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளாவிட்டால் நான் என்ன செய்ய முடியும், ஒவ்வொரு வருக்கும் அவர்களுக்கே உரிய வரம்புகள் உள்ளன. அதை மீறக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அகமதாபாதில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக் கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். முதல்கட்டத்தில் நிறை வுற்ற அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்து சிறிது தூரம் ரயிலில் பயணித்தார்.

இதைத் தொடர்ந்து ஜாம்நகர் குரு கோவிந்த் சிங் மருத்துவ மனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 750 படுக்கை வசதி கொண்ட கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் அங்கு மாணவர் விடுதியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டத்தில் சுமார் 40 நிமிட நேரம் குஜராத்தி மொழியில் பிரதமர் ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொச்சியா? கராச்சியா?

ஜாம்நகரில் ஏழைகளுக்கு மருத் துவ சிகிச்சை அளிக்கும் ஆயுஷ் மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசும் போது, “நாட்டிலேயே மிகச்சிறப் பான திட்டமாக ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அறிவித்த குறுகிய காலத்தி லேயே இந்தத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அது கொல்கத்தாவாக இருந்தா லும் சரி. கராச்சியாக இருந் தாலும் சரி” என்றார்.

பிரதமர் கராச்சி என்று பேசி யதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக தனது தவறைத் திருத்திக் கொண்ட பிரதமர் “அது கராச்சி அல்ல கொச்சி. கொல்கத்தாவோ…கொச்சியோ எந்த நகரமாக இருந்தாலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும். இப்போதெல் லாம் அண்டை நாட்டின் மீதான நினைவுகள் அதிகமாக உள்ளது” என்றார்.

பாகிஸ்தானில் உள்ள தீவிர வாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத் தியது. இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி பேசி வரும் பிரதமர், கொச்சி என்பதற்குப் பதிலாக கராச்சி என்று தவறுதலாக கூட்டத்தில் பேசியுள்ளார் என அரசியல் நோக் கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x