Published : 08 Mar 2019 11:23 AM
Last Updated : 08 Mar 2019 11:23 AM

ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில்  வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஜம்முவில் பொது பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மதியம் கையெறி குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 32 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனத் நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமத் ரியாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மேலும் 32 வயது மதிக்கத்தக்க இளைஞர்  ஒருவரும் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் குண்டுவெடிப்பை நடத்திய ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பைச் சேர்ந்த  ஒருவரைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி, ஜெய்ஷ் அமைப்பு நடத்திய புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாலகோட் தாக்குதலைத் நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான்  எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x