Published : 12 Mar 2019 05:21 PM
Last Updated : 12 Mar 2019 05:21 PM

நாட்டுக்குள் ஓர் உலகம்:  தமிழ்நாடும் துருக்கியும்... உ.பி.யும் பிரேசிலும்- தேர்தல் சுவாரஸ்யத் தகவல்கள்

நாட்டுக்குள் ஓர் உலகம்:  தமிழ்நாடும் துருக்கியும்... உ.பி.யும் பிரேசிலும்- தேர்தல் சுவாரஸ்யத் தகவல்கள்

 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் என்றால் அது மிகப்பெரிய திருவிழாதான். இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்களுக்கான பிரதிநிதிகளை 17வது லோக்சபாவுக்காக மக்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். உலகின் 36 ஜனநாயக நாடுகளனைத்தையும் சேர்த்தால் எவ்வளவு தொகுதிகளோ அவ்வளவு தொகுதிகள் கொண்டது இந்தியா.

 

1952 முதல் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிகள் 11.2% அதிகரித்துள்ளது. பாலின விகிதம் சீராக மாறிவருகிறது. 52 ஆண் வாக்காளர்களுக்கு 48 பெண் வாக்காளர்கள் என்ற விகிதாச்சாரமாக வளர்ந்துள்ளது.

 

2009 முதல் தொகுதிகளின் அளவு 16.3% அதிகரித்திருக்கும் வேளையில் 2014 மக்களவித் தேர்தலில்தான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சாதனை உயர்வை எட்டியது. அதாவது 1962-ல் 53.3% வாக்குகள் பதிவான நிலையில் 1984 தேர்தலில் 62.01%ஆக அதிகரித்தது. 1989-ல் 60.20%, 1998-ல் 60.75%,  1999, 2004, 2009களில் 60%க்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானது. ஆனால் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கிய 2014 மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 66.36%, இதுதான் இந்திய தேர்தல்களிலேயே வாக்குப்பதிவு விகிதாச்சாரத்தில் சாதனை படைத்த தேர்தல் ஆகும்.

 

அதே போல் வேட்பாளர்களுக்கான செக்யூரிட்டி டெபாசிட் ரூ.500லிருந்து 1998-ல் ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டவுடன் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்தது. பெண் வேட்பாளர்களின் பங்கு சற்றே அதிகரித்தது.

 

அதாவது 1952, இந்திய ஜனநாயக நாட்டின் முதல் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 1870. இதில் பெண் வேட்பாளர்கள் ஒருவரும் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1957-ல் மொத்தம் இந்தியா முழுதும் 1520 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், பெண் வேட்பாளர்கள் இதில் 2.96%.  படிப்படியாக பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து 2014-ல் மொத்தம் 8250 வேட்பாளர்களில் 8.1% பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  அதிகபட்சமாக 1996-ல் 13,950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

அதே போல் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் வாக்குச்சாவடி எண்ணிக்கைகள். 1952- 401 லோக்சபா தொகுதிகளாக இருந்தது 543ஆக உயர்வடைந்தது. தொகுதிகள் சுமார் 35% அதிகரித்ததைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1952-ல் 1.96 லட்சம் வாக்குச்சாவடிகள் என்பது 2014-ல் 9.28 லட்சம் வாக்குச்சாவடிகளாக அதிகரித்துள்ளது. அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளது.

 

மிகப்பெரிய ஜனநாயக நாடு:

 

ஜனவரி 2019-ல் வெளியிடப்பட்ட தரவுகளின் படி வரும் தேர்தலில் 89.78 கோடி மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் 5.89 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது ஒட்டுமொத்த துருக்கியின் 5.93 கோடி வாக்காளர்களுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் 14.43 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்த பிரேசிலின் வாக்காளர்கள் எண்ணிக்கையான 14.73 கோடியுடன் ஒப்பிடத் தகுந்ததாகும். இது போன்று இந்தியாவின் அனைத்து லோக்சபா தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையை ஒரு சில சிறிய நாடுகளின் வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்கத்தக்கதாகும், அதனால்தான் இந்தியா என்பது நாட்டுக்குள் ஓர் உலகமாகும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x