Last Updated : 07 Feb, 2019 05:55 PM

 

Published : 07 Feb 2019 05:55 PM
Last Updated : 07 Feb 2019 05:55 PM

‘பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டம்: ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கம்; தகுதியுடையவர்கள் யார்?- மத்திய அரசு அறிவிப்பு

வருமானவரி செலுத்துவோர்கள் குடும்பம், பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், முன்னாள் இந்நாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமான  ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கம் அளிக்கும் திட்டத்தின் கீழ் தகுதிபெற மாட்டார்கள்.

 

இவர்கள் தவிர டாக்டர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ், தொழில்பூர்வ அமைப்புகளுடன் பதிவு செய்திருக்கும் ஆர்க்கிடெக்ட்கள் இவர்களது உடனடி குடும்பத்தினர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி பெற மாட்டார்கள்.

 

பிரதமர் கிசான் சம்மன் நிதிக்காக பட்ஜெட்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதர்கான நடைமுறை வழிகாட்டுதல்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டது. இதன் படி 2 ஹெக்டேர்கள் பயிர்செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் குடும்பத்தின் கணவன், மனைவி, மைனர் வாரிசு என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அதாவது 2 ஹேக்டேர்கள் வரை விவசாயம் செய்யக்கூடிய நிலம் வைத்திருப்பவர்க்ளுக்கு, ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கம் என்ற நேரடி வருவாய் ஆதரவு திட்டத்தை அறிவித்தார்.

 

சிறு, குறு விவசாயிகள் என்றால், கணவன், மனைவி மற்றும் மைனர் வாரிசு ஆகியோர் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். அதாவது 2 ஹெக்டேர்களில் பயிர்செய்திருக்கிறார்கள் என்பது மாநில அல்லது யூனியன் பிரதேச ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்க வேண்டுவது அவசியம்.

 

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவனை மார்ச் 31க்குள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும், ஆனால் 2வது தவணைக்கு ஆதார் அவசியம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பணக்கார விவசாயிகள், நிறுவனம்சார் நில உடைமையாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் கிடையாது.

 

அதே போல் கீழ் வரும் விவசாயிகள் பிரிவினரும் இந்தத் திட்டத்தில் தகுதி பெற மாட்டார்கள்:

 

1. முன்னாள் மற்றும் இந்நால் அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள்.

2. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் முனிசிபாலிட்டி மேயர்கள் மற்ரும் முன்னாள் இந்நாள் மாவட்ட பஞ்சாயத்து  தலைவர்கள்.

3.முன்னாள் இந்நாள் மத்திய/மாநில அரசு ஊழியர்கள்.

 

ஆனால் மேற்கூறிய பட்டியைல் கிளாஸ் 4 மற்றும் குரூப் டி ஊழியர்கள் அடங்கமாட்டார்கள்.

 

மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் (இதிலும் கீழ்நிலை கிளாஸ் 4, குரூப் டி  பிரிவினருக்கு விலக்கு)

 

யாராவது தங்கள் சுயவிவரத்தைத் தவறாக அளித்து பயனடைந்தால் செலுத்தப்பட்ட தொகையை அவரிடமிருந்து திரும்பப் பெறப்படுவதோடு தண்டனைகளும் உண்டு.

 

பிரதமர்-கிசான் திட்டம் இந்த ஆண்டிலிருந்து அமலாகும், முதல் தவணை மார்ச்சில் வழங்கப்படும்.

 

இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x