Published : 12 Feb 2019 03:54 PM
Last Updated : 12 Feb 2019 03:54 PM

எஸ்-400 வாங்கும் போது கூட அரசு உத்தரவாதம் இல்லை; ஆனால் அது முற்றிலும் வேறுபட்டது: இந்திய விமானப்படை அதிகாரி

தி இந்து ஆங்கிலம் நாளிதழில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த உள் விவகாரங்களை என்.ராம் அம்பலப்படுத்தியதில் அரசு/வங்கி உத்தரவாதங்கள் தேவைஇல்லை என்று இந்திய அரசு கைவிட்டது மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளையும் நீக்கம் செய்தது ஆகிய கோளாறுகள் வெளியாகின. ஆனால் மூத்த விமானப்படை அதிகாரி கூறும்போது ரஷ்யாவுடனான ஒப்பந்தத்திலும் அரசு உத்தரவாதம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

ஏர்மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, இது தொடர்பாகக்  கூறும்போது, ‘ரஷ்யாவுடனான எஸ்-400 ஒப்பந்தத்தில் கூட அரசு உத்தரவாதம் நேர்மை உடன்படிக்கை ஆகியவை இல்லை.’ என்றார்.

 

இதே கேள்விக்குப் பதில் அளித்த ஏர் மார்ஷல் அனில் கோஸ்லா கூறும்போது, “ரஷ்யா, அமெரிக்கா விவகாரங்கள் முற்றிலும் வேறு, அங்கு ஒப்பந்த நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தில் இருக்கின்றன. ஆனால் மற்ற நாடுகளுடன் அவ்வாறு இல்லை” என்றார்.

 

பெயர் தெரிவிக்க விரும்பாத இன்னொரு அதிகாரி, இந்தப் பிரிவுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருந்ததில்லை என்றார்.

 

ஆனால் பிரான்ஸுடனான ஒப்பந்தத்துக்கும் ரஷ்யா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது, ரஷ்யாவில் எந்த ஒப்பந்தம் போடப்பட்டாலும் அது அரசுடன் செய்யும் ஒப்பந்தம்தான், ஏனெனில் எந்த ஒரு நிறுவனமும் அங்கு அரசு நிறுவனம்தான், இங்கு தனியாக அரசு உத்தரவாதம் என்பது தேவையில்லை.

 

அதே போல் அமெரிக்காவுடனான ராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்களிலும் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் அயல்நாட்டு ராணுவ விற்பனை (எஃப்.எம்.எஸ்.) என்ற பெண்டகன் கிளை வழியாகத்தான் செய்ய முடியும். அமெரிக்க தொழிற்துறையுடன் தனியாக எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது, ஆகவே அரசு உத்தரவாதம் என்பது ஒப்பந்தங்களில் உள்ளீடாகவே இருக்கும்.

 

மாறாக பிரான்ஸ் உடனான ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு இடையேயான் ஒப்பந்தங்களாக இருந்தாலும் விநியோக ஒப்பந்தங்கள் பிரான்ஸ் தனியார் நிறுவனங்களுடன் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே பிரான்ஸை அதில் பொறுப்புக் கூட்டாளியாகச் சேர்க்கும் அரசு உத்தரவாதம் என்ற பிரிவு அவசியம் தேவை என்பதே விஷயமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x