Published : 21 Feb 2019 01:13 PM
Last Updated : 21 Feb 2019 01:13 PM

பிஹார் அரசு பொறியாளர் தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்!- நெட்டிசன்கள் கிண்டல்

 

 

'இனி பிஹார் அரசாங்கத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றலாம்'.

 

பிஹார் பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு அண்மையில் 200 இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வை நடத்தியது. இதற்கு 17,911 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இருந்து 642 பேர் அடுத்த தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் கனடாவில் பிறந்த நடிகை சன்னி லியோன் 98.5 மதிப்பெண்களோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

பிஹார் பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு வலைதளமான phed.bih.nic.in இதை வெளியிட்டுள்ளது. சன்னி லியோன் கல்வியில் 73.5 மதிப்பெண்களும் அனுபவத்தில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவரின் தந்தை பெயராக லியோனா லியோனா இடம்பெற்றுள்ளது.

 

மூன்றாவது இடத்தில் “bvcxzbnnb” என்னும் பெயர் இடம்பெற்றுள்ளது.  92.89 மதிப்பெண்கள் பெற்ற அவரின் தந்தை பெயர்  “mggvghhnnnn” என இடம்பெற்றுள்ளது.

 

இதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள சன்னி லியோன், ''ஹாஹா, என்னுடைய இன்னொரு 'அவதாரம்' நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கு பதிலளித்த பிஹார் பொது சுகாதாரத்துறை அதிகாரி அசோக் குமார், ''பட்டியலில் யாரோ தவறான தகவல்களை இணைத்திருக்கிறார்கள். இது ஆன்லைனில் தேர்வாளர்கள் அளித்த தற்காலிகப் பட்டியல்தான். தவறு களையப்பட்டு இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x