Last Updated : 22 Feb, 2019 02:54 PM

 

Published : 22 Feb 2019 02:54 PM
Last Updated : 22 Feb 2019 02:54 PM

இம்ரான் கான் கட்சிக்கு தேர்தல் சமயத்தில் வாக்குகள் சேகரித்தது ஜெய்ஷ்-எ-முகமது: காங். தலைவர் மனீஷ் திவாரி

புல்வாமா தாக்குதலின் போது  பிரதமர் நரேந்திர மோடி மதியம் 3.10 முதல் 5.20 வரை என்ன செய்து கொண்டிருந்தார்? தூர்தர்ஷன் வீடியோ கிளிப் ஒன்று காட்டுவதன் படி பிரதமர் தன் போன் மூலம் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் மோடி பதில் கூறியாக வேண்டும் என்று தெரிவித்தார்.

 

அதாவது அவர் செய்தியாளர்களிடையே கூறும்போது,  “2 சாத்தியங்கள் இருக்கின்றன, ஒன்று புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது தெரிந்தும் அவர் ஆவணப்பட ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார்.. இரண்டாவது சாத்தியம் அபாயகரமானது, அதாவது தாக்குதல் நடந்ததே தெரியாமல் 2 மணி நேரங்களுக்கு ஒரு பிரதமர் இருந்திருக்கிறார்”

 

மேலும், “நாம் அணு ஆயுத நாடுதான், ஒவ்வொரு முறை தேசியப் பாதுகாப்பு தோல்வியடையும் போதெல்லாம் அதை மறைப்பதற்கு மூர்க்கவாதம் பேசுகிறார். நாட்டின் பாதுகாப்பு விஷயம் தோல்வியடைந்திருக்கும் போது உங்களையும் உங்கள் அரசையும் செயல்படவிட்டு சும்மாயிருக்க மாட்டோம்” என்று மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸைத் தாக்கிப் பேசிய போது, இம்ரான் கான் பேசுவதற்கும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் பளிச்சென ஒரு ஒற்றுமை தெரிகிறது என்று கூறியதற்கு பதில் அளித்த மனீஷ் திவாரி,  ‘தேசியவாதத்துக்கு பாஜக மட்டுமே காப்புரிமை பெற்றுள்ளதா என்ன? பாதுகாப்புப் படையினர் சார்பாக நின்று பேசுவதும் கடினமான கேள்விகளை கேட்பதும் ஒன்றையொன்று நீக்கிவிடக்கூடியது அல்ல’ என்று பதிலளித்தார்.

 

உலகக்கோப்பை... இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்:

 

வரும் உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த மனீஷ் திவாரி,  பாகிஸ்தான் உண்மையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டினால் ஜெய்ஷ் தீவிரவாதத் தலைவர் மசூத் அசாரைக் கைது செய்ய வேண்டும். அனைவருக்கும் தெரியும் தேர்தலின் போது இம்ரான் கானின் தெஹ்ரீகே இன்சாஃப் கட்சிக்கு ஜெய்ஷ் முகமது தீவிரவாத அமைப்பு வாக்குகள் சேகரித்த விவகாரம், என்றார்.

 

பாகிஸ்தானுடன் நதிநீர் பகிர்வை நிறுத்த வேண்டும் என்ற நிதின் கட்கரி கூற்று பற்றி மனீஷ் திவாரி கூறும்போது,  “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை வாசிக்கும் எந்த ஒருவருக்கும் புரியவரும் கிழக்குப் பகுதி நதிநீரை நாமும், மேற்குப் பகுதி நதிநீர் பாகிஸ்தானும் பயன்படுத்த முடியும் என்பது” என்றார் மனீஷ் திவாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x