Published : 06 Feb 2019 02:52 PM
Last Updated : 06 Feb 2019 02:52 PM

இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு தூண்டி வந்த தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் இயக்கத்திற்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம்

'காஷ்மீர் விடுதலை' உருவாகப் போராடி வருவதோடு பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த 'தெஹ்ரிக் உல் முஜாஹிதீன்' தீவிரவாத இயக்கம் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

''இந்தியாவில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் இயக்கத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டுக் கரங்கள் நிதியுதவி செய்து வருவதாக மத்திய அரசு நம்புகிறது.

1990களிலிருந்து தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இவ்வியக்கம் தனது பயங்கரவாத நடவடிக்கைகளால் 'காஷ்மீர் விடுதலை' என்ற குறிக்கோளை தீவிரமாகப் பின்பற்றுகிறது.

எனவே, தற்போது, 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் 35-வது பிரிவு (1) ன் கீழ் உபபிரிவு (a) விதியின்படி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இக்குறிப்பிட்ட சட்டத்தின் முதல் அட்டவணையில் மத்திய அரசு இதன் மூலம் உரிய திருத்தங்களைச் செய்து தெஹ்ரிக்-உல்-முஜாஹிதீன் (டியூஎம்) மற்றும் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் இயக்கம் பல பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. இவை மட்டுமின்றி கீழ்த்தரமான நடவடிக்கைகள், குண்டுவீச்சு தாக்குதல்கள், ஆயுதங்கள் வேட்டையாடுதல் மற்றும் ஹிஸ்புல்-உல்-முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக நிதி மற்றும் தளவாட உதவிகளைச் செய்து வந்தது.

பயங்கரவாதக் குழு பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவ தோடு, தொடர்ந்து செயல்படுத்திட இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆள்சேர்ப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த பல்வேறு வெடிகுண்டுத் தாக்குதல்களிலும் தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்கு இருப்பதை சமீபகாலங்களில் ஏராளமான வழக்குகளைப் பதிவுசெய்துள்ள காஷ்மீர் காவல்துறை தெரிவிக்கிறது. மேலும் இவ்வியக்கத்தின் பல்வேறு முக்கியப் பதவிகளில் உள்ளவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வியக்கம் காஷ்மீர் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து அவர்களுக்காகப் பயங்கரவாத பயிற்சி மையங்களை நடத்தி இளைஞர்களை பயங்கரவாதத்திற்குத் தூண்டி வருகிறது. மேலும் காஷ்மீரிலிருந்து இன்னும் இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது''.

இவ்வாறு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x