Last Updated : 18 Jan, 2019 12:35 PM

 

Published : 18 Jan 2019 12:35 PM
Last Updated : 18 Jan 2019 12:35 PM

காஷ்மீர் மலைப்பாதையில் திடீர் பனிச்சரிவால் டிரக் மாயம்: பயணம் செய்த 10 பேர் கதி என்ன?

காஷ்மீரின் உயரமான மலைப்பாதையில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியே சென்ற டிரக் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10 பேர் காணவில்லை என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிராந்தியத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்து குறித்து 'எல்லைச் சாலைகள் அமைப்பு' துறையின் உயரதிகாரி தெரிவித்ததாவது:

''லடாக் பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 17,582 அடி (5,359 மீட்டர்) உயரத்தில் கார்டங் லா பகுதி அமைந்துள்ளது. இது சீன எல்லைப் பகுதியாகும்.

இங்குள்ள மலைப்பாதையில் இன்று காலை 7 மணிக்கு டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்ட குறிப்பிட்ட இடத்தை அவ்வழியே கடந்தபோது வாகனம் மாயமானது.

பனிச்சரிவில் சிக்கியிருக்கும் நபர்களைக் காப்பாற்றுவதற்காக மீட்புப் பணியாளர்களையும் இயந்திரங்களையும் விரைந்து அனுப்புமாறு கேட்டிருந்தோம்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்து ராணுவம் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் பணியாளர் குறிப்பிட்ட இடத்தை அடைந்துள்ளனர். அவர்கள் துரிதகதியில் இயங்கி பனிச்சரிவில் சிக்கியவர்களி மீட்பார்கள் என்று நம்புகிறோம்''.

இவ்வாறு உயரதிகாரி தெரிவித்தார்.

டிரக்கில் இருந்த நபர்கள் பொதுமக்களா அல்லது பாதுகாப்புப் படை வீரர்களா என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x