Published : 19 Jan 2019 03:38 PM
Last Updated : 19 Jan 2019 03:38 PM

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும்: மம்தா வாழ்த்து

வரும் நாடாளுமன்ற  தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் ஸ்டாலின் வென்று சாதனைப்படைப்பார், அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மம்தாவை இரும்புப் பெண்மணி என புகழ்ந்தார். மோடியும் அமித்ஷாவும் மம்தாவைப் பார்த்து அஞ்சுவதாகவும், அவர்கள் வங்கத்துக்குள் வர அஞ்சுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின் தனது தந்தையை பெரிதும் மதிப்பபவர் மம்தா, தனது தந்தையின் மரணத்தின்போது உடனடியாக சென்னை வந்து அஞ்சலி செலுத்தினார் என்று தெரிவித்து நன்றி கூறினார்.

ஸ்டாலின் பேச்சில் வங்கமும் தமிழகமும் சகோதர சகோதரிகள் என்று கூறியதை குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியவுடன் மைக்கை கையில் வாங்கிய மம்தா உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்தார். தமிழில் வணக்கம் சொன்ன மம்தா பேசியதாவது:

“நன்றி ஸ்டாலின் அவர்களே. அனைத்து தமிழக சகோதர சகோதரிகளுக்கும் எனது வணக்கம், ஸ்டாலின் உங்கள் தந்தையை நான் பெரிதும் மதிப்பவள், தமிழக மக்கள் அனைவரையும் மதிக்கிறேன்.

வரும் தேர்தலில் நீங்கள் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி பெருவாரியான வெற்றிபெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக முன்கூட்டியே அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x