Last Updated : 09 Jan, 2019 06:08 PM

 

Published : 09 Jan 2019 06:08 PM
Last Updated : 09 Jan 2019 06:08 PM

காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: தேசிய மாநாட்டுக் கட்சியில் சேர வாய்ப்பு?

காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்கள் தொடர்பாக  மத்திய அரசிடமிருந்த நேர்மையான அணுகுமுறை கிடைக்கவில்லை என்று கூறி ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த 2010ல் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தவர் ஷா ஃபாயெசல். இவர் தனது 9 ஆண்டுகால பணிக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது பேஸ்புக்கில் இன்று கருத்து பகிர்ந்துள்ளார்.

ராஜினாமா செய்துள்ள ஷா ஃபாயெசல் பேஸ்புக்கில் தெரிவித்ததாவது:

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோருபவர்கள்மீது நயவஞ்சகமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலான தேசபக்தி என்ற பெயரில் இந்தியா வெங்கும் சகிப்புத்தன்மையும் வெறுப்பரசியலும் மேலோங்கி வருகிறது.

இதுநாள்வரை இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றிவந்த எனது ஐஏஎஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்.

காஷ்மீரில் தொடரும் கொலைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித நேர்மையான அணுகுமுறையும் கிடைக்கவில்லை,

இந்துத்துவா சக்திகள் தங்கள் கரங்களால் இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லிம்களை ஓரங்கட்டவும், அவர்களது இருப்பை காலிசெய்யவுமான காரியங்களை செய்துவருகிறது.

இந்நாட்டில், மக்களின் குரல்வளையை நீண்ட நாளுக்கு நசுக்கமுடியாது. உண்மையான ஜனநாயத்தை நிலைநாட்டுவதற்காக இதற்கொரு முடிவுகட்டியாக வேண்டும்.

இவ்வாறு ஃபாயெசல் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள ஷா ஃபாயெசல் அவரது அடுத்தகட்ட நடவடிக்கையாக தேசிய மாநாட்டுக் கட்சியில் சேரக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x