Published : 30 Jan 2019 02:37 PM
Last Updated : 30 Jan 2019 02:37 PM

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பரிசு: மகாராஷ்டிராவில் தொடக்கம்

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது.

இதைத் தொடங்கி வைத்துப் பேசிய மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே, ''பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகத்தை வழங்கி வருகிறோம்.

இந்தத் திட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம் நாட்டில் உள்ள 4 லட்சம் பெண்கள் பயன்பெறுவர். இந்த பரிசுப் பெட்டகத்தில் போர்வை, சிறிய மெத்தை, துண்டு, தெர்மாமீட்டர், குழந்தைக்கான எண்ணெய், ஷாம்பூ, விளையாட்டுப் பொருட்கள், நகம் வெட்டி, கையுறைகள், காலுறைகள் மற்றும் சில பொருட்கள் இருக்கும். இந்தப் பெட்டகம் சுமார் ரூ.2000 மதிப்பிலானது.

இதற்காக மாநில அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தேவைப்பட்டால் அதிக நிதி ஒதுக்கப்படும்'' என்றார் பங்கஜா முண்டே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x