Published : 26 Jan 2019 09:58 AM
Last Updated : 26 Jan 2019 09:58 AM

பிரியங்கா அரசியல் வருகை தாமதம் ஏன்? - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில்

பிரியங்கா தனது குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அவரது அரசியல் வருகை தாமதம் ஆனது என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் சிந்தனை யாளர்களுடன் கலந்துரையாடி னார். அப்போது அவர் பேசும்போது, “பாஜக தலைமையிலான அரசில் அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அடையாளம் காணப் படுகிறது. நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவவும் அவற்றை கட்டுப்படுத்தவும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்த மனோபாவத்தால் நீதித்துறை, கல்வித் துறை உட்பட அனைத்து இடங்களிலும் குழப்பம் நிலவுகிறது. இந்தியா அதன் 120 கோடி மக்களால் ஆளப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். நாட்டை ஒரே பிரிவு மக்கள், ஒரே சிந்தாந்தம் ஆளக்கூடாது. நாட்டின் முக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை பொருத்தவரை பாஜகவின் சிந்தனையில் இருந்து நாங்கள் மாறுபடுகிறோம். இந்த அமைப்புகள் அதிகாரத்துடனும் சுதந்திரமாகவும் செயல்படுவதை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.

ராகுல் தனது சகோதரி பிரியங்கா அரசியல் வருகை பற்றி கூறும் போது, “பிரியங்காவின் அரசியல் வருகை தொடர்பான முடிவு 10 நாட்களில் எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்தேன். உண்மையில் சில ஆண்டு களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி அவரிடம் நான் பேசியபோதெல்லாம் குழந் தைகள் இன்னும் வளரவில்லை. அவர்களை கவனிக்க வேண்டும் என்பதே அவரது பதிலாக இருந்தது. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். ஒருவர் பல்கலைக்கழகம் செல்கி றார். மற்றொருவர் பல்கலைக் கழகம் செல்லவிருக்கிறார்.

எங்கள் அரசியல் செயல் பாட்டை பொறுத்தவரை இருவரும் அவரவருக்கு உரிய இடத்தை கொடுப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x