Last Updated : 20 Jan, 2019 04:26 PM

 

Published : 20 Jan 2019 04:26 PM
Last Updated : 20 Jan 2019 04:26 PM

காஷ்மீரில் 2018ல் மட்டும் 257 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கவர்னர் ஆட்சியில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தகவல்

காஷ்மீரில் கடந்த 4 ஆண்டுகளில் 2018ல்தான் 257 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடும்போது முன்பு எப்போதையும் விட தீவிரவாத அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அவை மிக அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் விவரம் வருமாறு:

2017ல் மட்டும் 213 தீவிரவாதிகளும், 2016ல் 150 தீவிரவாதிகளும் மற்றும் 2015ல் 108 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 31 வரை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 142 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், மீதமுள்ள நான்கு மாதங்களில் மற்றவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட்டில் மட்டுமே 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது என்பது கடந்த ஆண்டிலேயே ஒரு மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

2018ல் 105 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட எண்ணிக்கை 2017ல் 97, 2016ல் 79, 2015ல் 67 ஆகும்.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சரணடைந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் ஆறு மடங்கு அதிகம். 2017ல் இரு தீவிரவாதிகளும் 2016ல் ஒருவரும் சரணடைந்துள்ளனர். 2015ல் யாரும் சரணடையவில்லை.

 

இந்த வன்முறை சம்பவங்களை ஆய்வுசெய்யும்போது 2018ல் உச்சத்தை தொட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 2017ல் 279 சம்பவங்கள் நடந்ததைப்போல 2018ல் ஒன்றரை மடங்கு அதிகமாகும். இந்த வன்முறைச் சம்பவங்களைப் பொறுத்தவரை 2016ல் 223, 2015ல் 143 என்ற எண்ணிக்கைகளில் பதிவாகியுள்ளன.

பாதுகாப்புப் படைகள் 2018ல் மட்டும் 153 ஏகே துப்பாக்கிகளும் 2017ல் 213 என்ற எண்ணிக்கையிலும் பறிமுதல் செய்தன. பறிமுதல் செய்யப்பட்ட  துப்பாக்கிகளின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 178, 2015ஆம் ஆண்டில் 177 என பதிவாகியுள்ளன.

 

காஷ்மீரின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிவரும் தன் பெயரை தெரிவிக்க விரும்பாத ஓர் உயரதிகாரி, இதுகுறித்து தெரிவிக்கையில்,

தீவிரவாதிகளுக்கு மிகவும் விருப்பமான ஆயுதம் ஏகே 47 ரக துப்பாக்கிகளாகும். வெளிநாட்டினர் உள்ளிட்ட 300 தீவிரவாதிகள், இப்பொழுதுவரைகூட காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக தெற்கு காஷ்மீர். இந்த இடம் இப்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதிகளின் மையமாக உள்ளது.

"இந்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கவும், கொல்லப்படுவதற்கான அச்சத்திலேயே வைத்திருக்கவும் முயன்று வருகின்றனர்''  என்று அதிகாரி கூறினார்.

தீவிரவாதத்தில் இறங்குபவர்களை பாராட்டுவது, தீவிரமான மத நடவடிக்கைகளில் ஈடுபவர்களை பாராட்டுவதன் வழியே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயற்பாடுகளை தீவிரவாதிகள் கண்காணித்துக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலமே தீவிரவாதத்தால் அவர்கள் எளிதாக வேட்டையாடப் படுகிறார்கள்.

மத்திய அரசு, புனித ரமலான் மாதம் தொடங்கிய மே 17 அன்று அதிரடி நடவடிக்கைககள் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்த பிறகான காலகட்டத்தில்தான்  மே 17 அன்று புனித மாதமான ரமாதானின் ஆரம்பத்தில் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தல். தீவிரவாத மயமாக்கல் இங்கு அதிகரித்தது.

இவ்வாறு உயரதிகாரி தெரிவித்தார்.

கவர்னர் ஆட்சியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இன்னொரு உயரதிகாரி இதுகுறித்து பேசுகையில்,

''மெஹ்போபா முஃப்தி தலைமையிலான அரசாங்கத்திற்கு பி.ஜே.பி ஆதரவு திரும்பப் பெற்றுக்கொண்டபிறகு  ஜூன் 19 அன்று கவர்னர் ஆட்சி ஏற்பட்டதிலிருந்து  காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x