Published : 17 Jan 2019 09:12 AM
Last Updated : 17 Jan 2019 09:12 AM

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தொழில்துறை பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை

இன்று தொழில் துறை தலைவர் களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்.

ஏற்கெனவே பொதுத் துறை வங்கியின் தலைவர்கள், தனி யார் வங்கிகளின் தலைவர் கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இரண்டு சுற்று ஆலோசனை நடத்தியுள்ளார் தாஸ்.

ரிசர்வ் வங்கியின் கவர்ன ராக கடந்த டிசம்பரில் பொறுப் பேற்ற பிறகு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள சிறு, குறுந் தொழில் துறையினருடனும் அவர் ஆலோசனை நடத்தி, அவர்களுக்கு நிதி கிடைக்க உரிய வழிகளை கண்டறி வதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பாக தொழில் துறை தலை வர்களுடன் அவர் வியாழக் கிழமை ஆலோசனை நடத்தப் போவதாக ட்விட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு உர்ஜித் படேல் கவர்னராயிருந்தவரை தொழிலகக் கூட்டமைப்புகளான சிஐஐ, ஃபிக்கி போன்றவற்றின் பிரதிநிதிகளுடன் மட்டுமே ஆலோசனை நடத்தியுள்ளனர். தொழில் துறையினரின் பிரச் சினைகளை ரிசர்வ்வங்கி செவி மடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு பரவலாக இருந்தது. இதனைப் போக்கும் வகை யில் ஒவ்வொரு துறையினரின் கருத்துகளையும் கேட்டு வரு கிறார் சக்தி காந்த தாஸ். தற்போது தொழில் துறை தலைவர்களுடன் வியாழக் கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கை காரணமாக நிதி தட்டுப்பாட்டால் பெரிய திட்டங்கள் முடங்கியுள் ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கெனவே கூறியிருந்தார். இதனடிப்படை யில் தொழில் துறை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு மாற்று வழி கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார் சக்தி காந்த தாஸ்.

கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கடனை ஒரு நாள் செலுத்தத் தவறினாலும் அந்தக் கடன் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். ரிசர்வ் வங்கியின் விதி எண் 7-க்கு மாற்றாக எத்த கைய அணுகுமுறையை மேற் கொள்ளலாம் என ஆர்பிஐ கவர்னர் ஆலோசனை நடத்த முன்வந்திருப்பது ஆரோக்கிய மான விஷயம் என்று தொழில் துறையினர் கருத்து தெரிவித் துள்ளனர்.

மின் துறை உள்ளிட்ட திட்டங் களுக்கு சலுகை காட்டலாம் என அரசு கூறிய போதிலும் ஆர்பிஐ அதை கவனத்தில் கொள்ளவில்லை. அதேசமயம் சிறு, குறுந் தொழிலுக்கு கடன் வழங்க மத்திய அரசு உத்தர வாதம் அளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து இத்துறையினருக்கு ரூ.25 கோடி வரை கடன் கிடைக்க வழி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x