Last Updated : 04 Dec, 2018 08:56 AM

 

Published : 04 Dec 2018 08:56 AM
Last Updated : 04 Dec 2018 08:56 AM

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு: மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தல்

டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத் தில் மேகேதாட்டு திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித் தது. இந்த திட்டத்துக்காக கர்நாடகா வுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண் டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய அணை கட்ட முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த நவம்பர் 29-ம் தேதி மத்திய நீர்வள ஆணையம் மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் மாதாந்திரக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் மசூத் ஹுசேன் தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடங்கிய வுடன் தமிழக பிரதிநிதிகள், மேகே தாட்டு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி இல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்தது சட்டப்படி தவறு. இந்த திட்டம் நிறைவேறினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.

அதற்கு கர்நாடக அரசுத் தரப்பில் கூறும்போது, “கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதி யில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. பெங்க ளூரு, மைசூரு, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் மற்றும் மின்சார தேவைக்காகவே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டப்படுகிறது. இந்த திட்டத்தால் தமிழக அரசுக்கு காவிரி நீர் வழங்குவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எனவே தமிழக அரசு இதை எதிர்க்கக் கூடாது” என விளக்கம் அளித்தனர்.

ஆணையத்தின் அனுமதி அவசியம்

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் தொடர்பாக விரிவாக விவாதிக்கவில்லை. தமிழக அரசு தரப்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆணையம் அதை ஏற்றுக்கொண்டது. பிற மாநில உறுப்பினர்களின் கவனத்துக்காக மேகேதாட்டு திட்டம் சுருக்கமாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை காலத்தில் நீர் பங்கீடு செய்யப்பட்டது குறித்து விவாதித்தோம். நிகழாண்டில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.

கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கைக்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது. மாறாக மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதற் கான அதிகாரம் அந்த ஆணையத் துக்கு இல்லை.

காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திட்ட வரைவு அறிக் கையையும் காவிரி ஆணையத்தின் அனுமதியையும் முதலில் பெற வேண்டும். அதன் பின்னரே திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத் துறை பரி சீலிக்க முடியும். இத்தகைய நடை முறைகள் இந்த விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். அப்போது முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விரை வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனி டையே கர்நாடக முதல்வர் குமார சாமி, மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க வரும் 6-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத் தைக் கூட்டியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x