Last Updated : 16 Dec, 2018 08:35 PM

 

Published : 16 Dec 2018 08:35 PM
Last Updated : 16 Dec 2018 08:35 PM

உ.பி.யில் பணிசெய்யாமல் செய்தித்தாள் படித்த போக்குவரத்து போலீஸ் இடைநீக்கம்

உபியின் தலைநகரான லக்னோவின் காவல்துறை கண்காணிப்பாற் சார்பில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது. இதில், பணிசெய்யாமல் அந்த நேரத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

உபியின் லக்னோவில் உள்ள ஹசரத்கன்ச் போக்குவரத்து நிறைந்த முக்கியமான பகுதி ஆகும். இம்மாநிலத்தின் பல முக்கிய அரசு மற்றும் கட்சி அலுவலகங்கள் நிறைந்த இங்கு நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும்.

 

இந்நிலையில், அங்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஜெய் பிரகாஷ் சிங் எனும் தலைமை காவலர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அப்போது அதன் சாலை வழியாக வந்த அவரது லக்னோ மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்(எஸ்எஸ்பி) கலாநிதி நைதானி, ஓரமாக தன் வாகனத்தை நிறுத்தி ஜெய் பிரகாஷை கவனித்தார்.

 

சுமார் பத்து நிமிடங்களுக்கும் அதிகமாக ஜெய் பிரகாஷ் தன் பணியை கவனிக்காமல் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்துள்ளார். இதை கண்டு அவரை அழைத்து விசாரித்து கலாநிதி, அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் எஸ்எஸ்பியான கலாநிதி கூறும்போது, ‘செய்தித்தாள் படிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆனால், அதை தங்கள் வீடுகளில் படித்து விட்டு பணிக்கு வர வேண்டும். இதை பணிநேரத்தில் படித்து காவலர்கள் தங்கள் பணியில் தவறுவதை ஏற்க முடியாது.’எனத் தெரிவித்தார்.

 

இந்த இடைநீக்கம் உபி காவலர்கள் இடையே கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது. ஜெய் பிரகாஷை இடைநீக்கம் செய்வதற்கு முன்பாக ஒருமுறை எச்சரித்திருக்கலாம் எனவும் இதுபோன்ற நடவடிக்கை இதுவரை எவர் மீது எடுக்கப்பட்ட்டதிலை என்றும் புலம்புகின்றனர்.

 

உபியின் லக்னோவில் புதிய எஸ்எஸ்பியாக அமத்தப்பட்டிருக்கும் கலாநிதி, பல நேரங்களில் தானே சாலையில் இறங்கி போக்குவரத்துகளை சரி செய்வது அன்றாட சம்பவமாக உள்ளது. இதை பொதுமக்கள் இடையே பாரட்டை பெற்றுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x