Last Updated : 29 Dec, 2018 07:17 AM

 

Published : 29 Dec 2018 07:17 AM
Last Updated : 29 Dec 2018 07:17 AM

இளம்வயதினரிடம் பிரபலமாகும் டிக் டாக் வீடியோ: ஆபாச உடலசைவுகள், வசனங்கள் வருவதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு

டிக் டாக் வீடியோ செல்போன் செயலியானது இளம் வயதினரிடம் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆபாச உடலசைவுகள், வசனங்கள் இடம்பெறும் வீடியோக்கள் இந்த செயலியில் வருவதால் இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் போன்ற சமூக வலைதளங்கள் போல டிக் டாக் செயலியும் மிகவும் பிரபலமாகிவிட்டது. சீனாவைச் சேர்ந்த பைட்டேன்ஸ் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூன் வரை இதில் இந்த செயலியை 50 கோடி மக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டாக் டாக் மியூசிக்கலி ஆப் செயலிக்கு அடிமையாக உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இது மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த செல்போன் செயலியில் இடம் பெற்றுள்ள பாடல்கள், வசனங்கள், திரைப்பட காட்சிகள், கதாநாயகன், கதாநாயகி இணைந்து ஆடக்கூடிய பாடல் வரிகள் என அனைத்துமே கிடைக்கின்றன.

இந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னைத்தானே ஒரு ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ கற்பனை செய்து கொண்டு அதே போன்று வீடியோ எடுத்து அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்கின்றனர். இதை சமூக வலைதளங்களில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பகிர்கின்றனர். இதில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் டிக் டாக் வீடியோ செயலியில் வரும் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. டிக் டாக் செயலி மூலம் வெளியாகும் இளம் பெண்களின் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சி னைகள் ஏற்படுவதாகவும் செயலியை விமர்சிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்த வீடியோக்களைப் பார்க்கும் சிலர், அந்தப் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதாகவும், ஆபாசக் கருத்துகளை பகிர்வதாக வும் தெரிகிறது. ஆனால் இந்த செயலியானது 12 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது என்று அதை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக் கிறது. ஆனால் குழந்தைகளின் பெற்றோர் இந்த செயலியை எதிர்க்கவே செய்கிறார்கள். செயலி உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கும் கருத்துகளை அவர்கள் ஏற்பதாக இல்லை. ஆபாசமான சினிமா பாடல் வரிகளுக்கு பெண்கள் வாயசைத்து அதை வீடியோவாக வெளியிடும்போது அதைப் பார்க்கும் மற்றவர்கள் கருத்து என்னவாக இருக்குமோ என்று பெற்றோர் அச்சம் கொள்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த13 வயது சிறுமியான ஹலியா பீமர் என்பவர், டிக் டாக் வீடியோ மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரை 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். சில பெண்களின் வீடியோக்களை டிக் டாக் செயலியில் பார்க்கும் நபர்கள், அந்த பெண்ணின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை கேட்கின்றனர். அதாவது பெண்ணின் விலாசம், செல்போன் எண் போன்ற விவரங்களைக் கேட்பதால் அந்த பெண்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதால் இந்தோனேசியா நாட்டில் கடந்த மே மாதம், இந்த செயலிக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்தது.

இதையடுத்து சீனாவிலிருந்து டிக் டாக் நிறுவன ஊழியர்கள் இந்தோனேசியா சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேவையில்லாத வீடியோக்களை டிக் டாக் செயலியில் பதிவேற்றுவதைத் தடுக்க கூடுதலாக இந்தோனேசியாவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்ட பின்னரே அங்கு செயலியை பதிவிறக்கம் செய்ய அரசு அனுமதி அளித்தது.

இதேபோல இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்களின் குறைந்தபட்ச வயது 16 ஆக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இன்டர் நெட் கண்காணிப்புக் குழு உத்தர விட்டது. பிரான்ஸில் டிக் டாக் செயலியை 11 முதல் 14 வயதுள்ள சிறுவர்களில் 38 சதவீதம் பேர் பயன் படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

11 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 58 சதவீதம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இதுபோன்ற செயலிகளால் ஒழுக்கமற்ற பாலியல் இச்சைகளுக்கு இளம்வயதினர் இலக்கு வைக்கப்படலாம் என பிரான்ஸ் போலீஸார் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தனர்.

அதே நேரத்தில் செயலியைப் பயன்படுத்துவோரைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், செயலியில் பதிவேற் றப்படும் வீடியோக்களை கண் காணித்து வருவதாகவும் பைட் டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபாசமான அசைவுகளுடன் நடனங்கள், கவர்ச்சியான உட லமைப்பைக் காட்டும் வீடியோக்கள், ஆபாச வசனங்களுடன் உள்ள வீடியோக்கள் இதில் அதிகம் வருகின்றன என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது குழந்தைகளின் செல்போன்களில் இருந்த இந்த செயலியை நீக்குவது என பல பெற்றோர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x