Published : 19 Dec 2018 08:36 AM
Last Updated : 19 Dec 2018 08:36 AM

சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் நீதி நிலைநாட்டப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

சீக்கியர் கலவர வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 1984 சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீக்கியர் கலவர வழக்கை குறிப்பிட்டு பேசினார். அவர் கூறியதாவது:

சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக் கப்படுவார்கள் என்று 4 ஆண்டு களுக்கு முன்பு யாராவது நினைத் துப் பார்த்திருக்க முடியுமா? இப்போது அது நடந்திருக்கிறது. சீக்கியர் கலவர வழக்குகளில் நீதி நிலைநாட்டப்படும்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதுவெல்லாம் நடக்கும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x