Published : 13 Dec 2018 10:20 AM
Last Updated : 13 Dec 2018 10:20 AM

மிசோரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜோரம்தங்கா

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) வெற்றி பெற்றது. இக்கட்சி மொத்தம் உள்ள 40-ல் 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் காங்கிரஸ் 5, பாஜக 1, சுயேச்சைகள் 8 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, எம்என்எப் தலைவர் ஜோரம்தங்கா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் வரும் 15-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தற்போது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உள்கட்சிக் குழப்பம், பழைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பளித்தது, தேர்தலுக்கு முன்னதாக உள்துறை அமைச்சராக இருந்த லால் ஜிர்லியானா ராஜிநாமா செய்தது ஆகி யவை முக்கிய காரணங்கள் என்று அர சியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள் ளனர். அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி யதும் அந்தக் கட்சிக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியி லிருந்த காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததாகத் தெரிகிறது. கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்காததும் தேர்தல் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. போதாத குறைக்கு காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் அந்தக் கட்சி யின் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படு கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2014-ல் முழு மதுவிலக்கைத் தளர்த்தி அங்கு மதுவிற்பனையை காங்கிரஸ் அரசு அனும தித்தது. இதனால் அங்கு மதுவால் உயிரி ழப்புகள் அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இதைத் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றால் முழு மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று மிசோ தேசிய முன்னணி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. எனவே காங்கிரஸின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஜோரம் தங்கா கூறும்போது, “மாநிலத்தில் நல்ல சாலை வசதிகளை காங்கிரஸ் செய்து தர வில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி மது விலக்கு கொள்கையைத் தளர்த்தியதால், எங்கள் வாக்கு எண்ணிக்கை அதிகரித் தது. மதுவிலக்கை மீண்டும் முழுமை யாக அமல்படுத்துவோம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதை மக்களுக்கு செய்து தருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x