Published : 24 Dec 2018 09:48 AM
Last Updated : 24 Dec 2018 09:48 AM

மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருந்தாலும் ஒடிசா ஆட்சிப் பணி தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி

ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி சந்தியா சம்ரத் ஒடிசா ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒடிசா மாநிலம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த மல்கான்கிரி மாவட்டத் தில் உள்ள சலிமி என்ற கிரா மத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சந்தியா சம்ரத். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்தியா சம்ரத், தனது ஆர்வத்தாலும் விடாமுயற்சி யாலும் ஒடிசாவின் ஆட்சிப் பணி தேர்வில் முதல்முறை யிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

சந்தியாவின் தந்தை ராம்தேப் சம்ரத் ஒரு விவசாயி. சாதாரண குடும்ப சூழ்நிலையில் பிறந்த சந்தியா மல்கான்கிரியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா வில் 10-ம் வகுப்பும் பிளஸ் டூவும் முடித்தார். பின்னர், புவனேஸ்வரில் உள்ள தன்னாட்சி கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பும் ரவீன்ஷா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்தார். உட்கல் பல்கலைக்கழகத்தில் எம்.பில் மற்றும் பி.எச்டி முடித்தார். ஒடிசா ஆட்சிப் பணித் தேர்வை சந்தியா சம்ரத் எழுதினார். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் முதல்முறையிலேயே சந்தியா வெற்றி பெற்றார். மொத்தம் 106 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் சந்தியா 91-வது இடம் பிடித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சந்தியா சம்ரத், ‘‘ஒடிசா ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் முதல்முறையிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். உறுதியான நோக்கம் இருந்தால் யாரையும் எதுவும் தடுக்க முடியாது. மல்கான்கிரியில் உள் ளடங்கிய கிராமங்களிலும் திற மைக்கு பற்றாக்குறை இல்லை. அனைவருக்கும் திறமையை நிரூபிக்க சரியான சந்தர்ப்பமும் முறையான வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது’’ என்றார்.

அடுத்து யுபிஎஸ்சி தேர்வு எழுதப்போவதாகவும் சந்தியா சம்ரத் உற்சாகத்துடன் தெரிவித் துள்ளார். அவரது வெற்றியை சலிமி கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x