Published : 19 Dec 2018 08:09 AM
Last Updated : 19 Dec 2018 08:09 AM

பாக். சிறையிலிருந்து இந்தியர் விடுதலை; 6 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்பினார் நிஹல் அன்சாரி

பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இந்தியர் ஹமித் நிஹல் அன்சாரி நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஹமித் நிஹல் அன்சாரி (33). இவர் சமூக வலைதளத்தில் பாகிஸ் தானைச் சேர்ந்த பெண் ஒருவரு டன் பழகி உள்ளார். அவரைப் பார்க்கும் ஆவலில் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வழி யாக பாகிஸ்தானுக்குள் நுழைந் ததாகக் கூறப்படுகிறது. அப் போது அவர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாகிஸ்தானின் போலி அடையாள அட்டை வைத் திருந்ததாகவும் உளவு பார்த்த தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அன்சாரிக்கு 2015 டிசம்பர் 15-ம் தேதி ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். அன்சாரியின் சிறை தண்டனை கடந்த 15-ம் தேதி யுடன் முடிந்தது. ஆனால் நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் தயாராகாததால், அவரால் தாயகம் திரும்ப முடியாதநிலை இருந்தது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை களை முடிக்க பெஷாவர் உயர் நீதிமன்றம் 1 மாதம் அவகாசம் வழங்கியது. ஆனாலும் உடனடி யாக அன்சாரியை இந்தியா வுக்கு அனுப்பி வைப்பதற்கான ஆவணங்களை பாகிஸ்தான் அரசு தயார் செய்தது. இதையடுத்து, அன்சாரி நேற்று சிறையிலிருந்து விடுவிக் கப்பட்டார்.

பின்னர் வாகா - அட்டாரி எல்லையில் அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ் தான் அதிகாரிகள் ஒப்படைத்த னர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு அன்சாரி நாடு திரும்பியதை யடுத்து அவரது தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x