Last Updated : 19 Nov, 2018 08:44 AM

 

Published : 19 Nov 2018 08:44 AM
Last Updated : 19 Nov 2018 08:44 AM

பஞ்சாபில் ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதலா?- மர்ம நபர்கள் குண்டுவீச்சில் 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் அமரிந்தர் சிங்குடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ளது அதிவாலா கிராமம். இங்கு ‘நிரன்காரிஸ் பவன்’ என்ற பெயரில் மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமைதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட வருவார்கள். வழக்கம் போல் நேற்று நிரன்காரிஸ் பவனில் மதக் கூட்டமும் விழாவும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருசக்கர வாகனத் தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென மதக் கூட்டம் நடந்த இடத்தில் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் 3 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர் என்று பஞ்சாப் போலீஸ் உயரதிகாரி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் டிஜிபி சுரேஷ் அரோரா கூறும் போது, ‘‘இந்தத் தாக்குதல் தீவிர வாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் குறிப்பிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. அவர்கள் மீது வெடிகுண்டு வீசுவதற்கு காரணமும் இல்லை. தாக்குதல் நடந்த நிரன்காரிஸ் பவனில் சிசிடிவி கேமராக்களும் இல்லை’’ என்றார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மதோபூர் பகுதியில் கடந்த வாரம் ஓட்டுநர் ஒருவரை ஏமாற்றி மர்ம நபர்கள் ஐந்தாறு பேர் காரைக் கடத்தி சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ் தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார்படுத் தப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்தார். மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை செயல், டிஜிபி, சட்டம் ஒழுங்கு பிரிவு டிஜி, புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில், ‘‘டர்பன் அணிந்திருந்த 2 இளைஞர்கள், நிரன்காரிஸ் பவன் மீது வெடிகுண்டு வீசியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடனடி யாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x