Last Updated : 21 Nov, 2018 04:53 PM

 

Published : 21 Nov 2018 04:53 PM
Last Updated : 21 Nov 2018 04:53 PM

விபரீதத்தில் முடிந்த சாகசப் பயணம்: அந்தமான் தீவில் பூர்வீகப் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கர்

அந்தமான் தீவு ஒன்றில் வெளியுலகத் தொடர்புகளற்ற பூர்வீகப் பழங்குடியினரால் சாகசப் பயணம் சென்ற அமெரிக்கர் அம்பெய்திக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

வடக்கு செண்டினல் தீவில் வாழும் பூர்வீகப் பழங்குடியினர் வெளியுலகுடன் தொடர்பற்றவர்கள்,  21ம் நூற்றாண்டிலும் நவீனமயமடையாத கடைசி பழங்குடி பூர்வீக மனிதர்கள் மூர்க்க குணம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இங்கு யாரும் போகக்கூடாது என்று உத்தரவு உள்ள நிலையில் அமெரிக்கருக்கு அங்கு செல்ல 7 மீனவர்கள் உதவியுள்ளனர், அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி விஜய் சிங் தெரிவித்தார்.

இந்தப் பூர்கக்குடி பழங்குடி மக்கள் அடர்ந்த காட்டுப்பகுதித் தீவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அருகில் யாரும் செல்ல முடியாது, சென்றால் அம்பெய்தி கொன்று விடுவார்கள்.

அமெரிக்கர் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளார், இவரது உடலை மீனவர்கள் கண்டுபிடித்தனர். இவரை சனிக்கிழமை கொலை செய்துள்ளனர் என்று கூறிய போலீஸ் அதிகாரி விஜய் சிங், அவரது உடலைத் தேடிவந்ததாகத் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் காத்லீன் ஹோஸீ, இந்தச் சம்பவம் தெரியும் என்றும் ஆனால் இது குறித்து மேலும் பேச அனுமதியில்லை என்றும் மறுத்துள்ளதாக கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.

ஜிண்டால் குளோபல் சட்டப்பள்ளியின் பேராசிரியர் மற்றும் சமூக விஞ்ஞானி ஷிவ் விஸ்வநாதன் கூறுகையில் வடக்கு செண்டினல் தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. அங்கு வாழும் ஆதித் தொல் பழங்குடியினத்தின் மக்கள் தொகை என்னவென்று சரியான கணக்கு இல்லை, ஆனால் இந்த இனம் அழிந்து வருகிறது, அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

2ஏஇதற்கு முன்பாக 2006-ல் இதே பழங்குடியினர் 2 மீனவர்களைக் கொன்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x