Last Updated : 16 Nov, 2018 08:26 AM

 

Published : 16 Nov 2018 08:26 AM
Last Updated : 16 Nov 2018 08:26 AM

இந்திய-பசிபிக் பகுதியை வளமாக்குவோம்: கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப் பைன்ஸ், வியட்நாம், மியான்மர், கம்போடியா. புரூனை மற்றும் லாவோஸ் ஆகிய 10 ‘ஆசியான்’ நாடுகள், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சார்பில், 13-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 5-வது முறையாக பங்கேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகளுக்கிடையே பலதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவை மேம் படுத்த வேண்டும் என்ற என் னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். மேலும், அமைதி, வளமான இந்திய பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக மீண்டும் வலியுறுத்தி கூறினேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், மாணவர் படை பரிமாற்ற திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய தேசிய மாணவர் படையினரையும் (என்சிசி) பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தியா-சிங்கப்பூர் ஹாக்கத்தான்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் சென்றிருந் தார். அப்போது, அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங்கை சந்தித்த மோடி, இரு நாடுகளும் இணைந்து கணினி நிபுணர்களுக்கான போட்டி (இந்தியா-சிங்கப்பூர் ஹாக்கத்தான்) நடத்தலாம் என ஆலோசனை கூறினார். இது இளைஞர்களின் புத்தாக்க திறனை வெளிக்கொண்டுவர உதவும் என்றார். இதை லூங்கும் ஏற்றுக் கொண்டார்.

இதன்படி தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில், இரு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் அடங்கிய தலா 20 குழுக்கள் பங்கேற்றன. இதில் முதல் 6 இடங்களைப் பிடித்த குழுக்களுக்கான இறுதிப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு நாடுகளைச் சேர்ந்த தலா 3 குழுக்களையும் பிரதமர் மோடி பாராட்டி ரொக்கப் பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்தியாவின் ஐஐடி காரக்பூர், என்ஐடி திருச்சி மற்றும் எம்ஐடி புனே ஆகிய 3 கல்வி நிறுவனங்களின் மாணவர் குழுக்கள் பரிசு பெற்றன. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கல்வி அமைச்சரும் பங்கேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், “இந்தப் போட்டி தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் சக்தி ஆகியவற்றுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. முதன்முறையாக நடந்த போட்டியில் வென்றவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x