Published : 26 Nov 2018 08:49 AM
Last Updated : 26 Nov 2018 08:49 AM
டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜக தலைவர்கள் கூட்டங் களில் நேரடியாக மத விரோ தத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். இதற்கு பாஜக தலைவர் அமித் ஷா நல்ல உதாரணம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் மத விரோதத்தை தூண்டும் வகையில் அமித் ஷா பேசுகிறார். அமித் ஷா போல ஆர்எஸ்எஸ்சில் பத்து அமித் ஷாக் கள் மறைமுகமாக மக்களிடம் மத விரோதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். காங்கிரசுக்கு இது பெரிய சவாலாக உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT