Published : 20 Oct 2018 11:57 AM
Last Updated : 20 Oct 2018 11:57 AM

‘‘இனிமேல் 50 வயதுக்கு பிறகு தான் வருவேன்; அதுவரை காத்திருப்பேன்’’ - சபரிமலையில் மதுரை சிறுமி உருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்த மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், இனிமேல் 50 வயதுக்கு பிறகு தான் வருவேன், அதுவரை காத்திருப்பேன் எனக்கூறி பதாகையை ஏந்தி நின்றார்.

சபரிமலைக்கு அனைத்து பெண்களும்செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் நேற்றுமுன்தினம் நடை திறக்கப்பட்டபின் அங்குச் செல்ல முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் கீழே இறக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று, ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், கொச்சியைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஆகியோர் நேற்று சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் கதவை பூட்டுவோம் என்று தந்திரி தெரிவித்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால், அந்த இரு பெண்களும் மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். இதனால் சபரிமலையில் நேற்று முழுவதும் பதற்றம் நீடித்தது.

சபரிமலையில் இன்று பக்தர்கள் பெண்கள் வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சக பெண் பக்தர்களை சோதனையிட்டவாறே அவர்கள் இருந்தனர். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் ஜனனியுடன் சபரிமலை வந்துள்ளார். கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர்கள் பின்னர் மற்ற பக்தர்கள் சிலருடன் இணைந்து பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜனனி பதாகையை ஏந்தியபடி போராட்டக்காரர்களுடன் நின்றார். அந்த பதாகையில் ‘‘ எனது பெயர் ஜனனி. எனக்கு வயது 9. சபரிமலையில் வழிபாடு நடத்த வந்துள்ளேன். இனிமேல், 50 வயதுக்கு பிறகு தான் இங்கு வருவேன். அதுவரை ஆர்வத்துடன் காத்திருப்பேன்’’ என எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதேசமயம், இனிமேல் எனது மகள் 50 வயதுக்கு பிறகு தான் வருவாள். அதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். எங்கள் மன உறுதியை மற்றவர்களுக்கு தெரிவிக்கவே பதாகை ஏந்தி எனது மகள் நின்றாள்’’ எனக்கூறினார்.

‘வடசென்னை’ படம் பற்றி வடசென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

வடசென்னை 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x