Published : 10 Oct 2018 10:56 AM
Last Updated : 10 Oct 2018 10:56 AM

பாஜகவுக்கு தோல்வி: 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி; கருத்து கணிப்பில் தகவல்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் நவம்பர் 20-ம் தேதியும் நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், மிஸோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28-ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்கள் குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏபிபி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் டைம்ஸ் நவ், சிவோட்டர்ஸ் இணைந்து 3 மாநிலங்களில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான்

மொத்த இடம்: 200

காங்கிரஸ்: 129

பாஜக: 63

பிறர்: 8

 

சத்தீஸ்கர்

மொத்த இடம்: 90

காங்கிரஸ்: 47

பாஜக: 39

பிறர்: 4

 

மத்திய பிரதேசம்

மொத்த இடம்: 230

பாஜக: 126

காங்கிரஸ்: 97

பிறர்: 7

இதுபோலவே ‘டீம் பிளாஷ்’ நிறுவனம் தெலங்கானா மாநில தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா

மொத்த இடம்: 119

டிஆர்ஸ்: 85

காங்கிரஸ்: 17

ஏஐஎம்ஐஎம்: 7

பாஜக: 5

பிறர்: 4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x