Published : 22 Aug 2014 09:59 AM
Last Updated : 22 Aug 2014 09:59 AM

கட்டிடங்களை மதிப்பிட்டதில் முறைகேடு: சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர் வாதம்

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் சொந்தமான கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் முறைகேடு நடந்துள்ளது. ஆதலால் அவற்றை இவ்வழக்கில் ஆதாரங்களாக ஏற்க கூடாது என சுதாகரன் மற்றும் இளவரசியின் வழக்கறிஞர் அமித் தேசாய் தெரிவித்தார்.

ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சுதாகரன் மற்றும் இளவரசியின் சார்பாக வழக்கறிஞர் அமித் தேசாய் 6-வது நாளாக இறுதி வாதத்தை முன் வைத்தார்.

அவர் வாதிட்டதாவது: ‘சொத்துக்குவிப்பு வழக்கின் காலக்கட்டத்திற்கு(1991-96) முன்பு இருந்தே சுதாகரனும்,இளவரசியும் இணைந்து பல்வேறு தனியார் நிறுவனங்களை நடத்தியுள்ளனர்.

அந்நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் ப‌ல்வேறு இடங்களில் கட்டிடங்களையும், காலி இடங்களையும் வாங்கினர். இதில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு துளியும் தொடர்பில்லை.

1997-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங் கிய போது சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்து களையும், தனியார் நிறுவனங் களையும் ஜெயலலிதாவிற்கு சொந்தமா னதாக சித்தரித் துள்ள‌னர். ஆனால் இதற்காக எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யவில்லை.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லம்ம நாயுடு அப்போதைய அரசு ஊழியர்களில் சிலரை தேர்ந்தெடுத்து கட்டிடங்களை ம‌திப்பிட உத்தரவிட்டார். அந்த குழுவினர் கட்டிடங்களின் மதிப்பை பல மடங்கு மிகைப் படுத்தி அறிக்கையை தயார் செய்துள் ளனர்.

மதிப்பீட்டு குழுவில் இருந்த பெரும்பாலானோர் கட்டிடத் துறையிலும்,பொறியியல் துறையிலும் அனுபவம் வாய்ந்த‌ வர்கள் அல்ல. அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்ததால் சுதந்திரமாக செயல்படமுடியாமல் போனது. சொத்து மதிப்பை மிகைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத் திற்காக பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர்.

எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் நியமிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை இவ்வழக்கில் ஆதாரமாக ஏற்கக்கூடாது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x