Published : 08 Aug 2018 08:15 AM
Last Updated : 08 Aug 2018 08:15 AM

18 ஆண்டு சவாலும், திருவள்ளுவர் சிலை திறப்பும் 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் 18 ஆண்டு கால சவாலை வென்று, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தால் கடந்த 1991-ம் ஆண்டு பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவப் பெற்றது. அதற்கு கன்னட அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக திருவள்ளுவரின் சிலை திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. அவ்வப்போது தமிழக அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்காமல் பெங்களூருவில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தார்.

இதே போல சந்தன கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய போது, திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் கர்நாடக அரசு அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திருவள்ளுவர் சிலையை திறக்குமாறு எடியூரப் பாவிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இருவரும் சந்தித்து சகோதரத்துவத்தோடு உரையாடி னர். பின்னர் சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலையும், பெங்களூருவில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் திறக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கருணாநிதி பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். கன்னட அமைப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, பிரம் மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் கருணாநிதி பங்கேற்று, நீண்ட சிறப்புரை ஆற்றினார். அப்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு தன் சவால் நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x