Last Updated : 01 Aug, 2018 04:57 PM

 

Published : 01 Aug 2018 04:57 PM
Last Updated : 01 Aug 2018 04:57 PM

சமையல் எரிவாயு விலை உயர்வு;பாஜக அரசின் பேராசையே காரணம்: காங்கிரஸ் விமர்சனம்

இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், நரேந்திர மோடி அரசு எரிபொருளின் பெயரில் மக்கள் பணத்தைச் சுரண்டுவதில் மற்றொரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சர்ஜிவாலா கூறுகையில், ''நேற்று நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.35.50 விலை உயர்ந்துள்ள நிலையில், மோடி அரசாங்கத்தின் பேராசையானது ஒவ்வொருவரின் பட்ஜெட்டிலும் ரத்தம் வடியவைக்கிறது. மோடி அரசாங்கத்தின் பேராசையால் எரிவாயு சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மிகவும் குரூரமாக நடந்துகொள்கிறது. மக்கள் எரிபொருளின் பெயரால் சூறையாடப்படுகின்றனர்.

உயர் பெட்ரோலியம் மற்றும் டீசல் விலை உயர்வைப் போலவே, மோடி அரசாங்கம் மீண்டும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் பட்ஜெட்மீது நள்ளிரவு தாக்குதலை தொடங்கியுள்ளது.

பாஜக அரசு ஏற்கெனவே எரிபொருள் விலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட வரி மூலம் மிகப் பிரமாண்டமாக ரூ.10 லட்சம் கோடியை சம்பாதித்துள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கடின உழைப்பு சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் பேராசையின் காரணமாக நீராவியாகி விட்டது. பாஜக அரசு, சாமான்ய மக்களின் சேமிப்பிலிருந்து லாபம் ஈட்ட நினைப்பது ஏன்? அவர்களது சொற்ப வருமானத்தின்மீது அதிக சுமையை ஏற்றுவது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களோடு விளையாடுகிறார். அவர் அளித்த அச்சே தின் என்ற வாக்குறுதி மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எரிசக்தி பொருட்களின் விலைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.

புதுடெல்லியில் மானிமில்லாத எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35.50 உயர்ந்துள்ளது. இதுவே ரூ.1.76 மான்யம் அளவுக்கு குறைக்கப்படும். இவ்விலை உயர்வு இன்றிலிருந்து (ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது.

இந்திய எண்ணெய் கழகத்தின் கூற்றுப்படி, மானியமில்லாமல் எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை அதிகரிப்பு சர்வதேச விலை மற்றும் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களின் மாற்றங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

மானிய விலையிலான சிலிண்டர் ஒன்று ஜூலை மாதம் 496.26 ஆக இருந்தது தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 498.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x