Last Updated : 29 Aug, 2018 08:34 AM

 

Published : 29 Aug 2018 08:34 AM
Last Updated : 29 Aug 2018 08:34 AM

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையால் ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கு இந்த ஆண்டில் 782 அதிகாரிகளே தேர்வு

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிகழாண்டில் குடிமைப் பணிக்கு குறைவான அதிகாரிகளே தேர்வு செய்யப்பட விருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு குடிமைப் பணிக்கு 980 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலை யில், இந்த ஆண்டு 782 அதி காரிகள் மட்டுமே தேர்வு செய்யப் படவுள்ளனர்.

மத்திய குடிமைப்பணி அதிகாரி கள் மற்றும் பயிற்சித்துறையின் (டிஒபிடி) தற்போதைய புள்ளி விவரத்தின்படி, நாடு முழுவதும் 1,449 ஐஏஎஸ் மற்றும் 970 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அத்துடன், மத்திய அமைச்சகங்களில் சுமார் 400 இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர்களின் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.

இந்நிலையில், குடிமைப் பணி களுக்கான தேர்வை நடத்தும் மத்திய பொதுப்பணி தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) சார்பில் வெறும் நிகழாண்டுக்கு 782 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர் எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 துறைக்கானப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 198 பணி யிடங்கள் குறைவாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையே காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:

ஐ.ஆர்.எஸ். பணியின் சுங்க வரி, வருமான வரி மற்றும் வரு வாய் ஆகிய பிரிவுகளில் டிஜிட் டல் முறை மற்றும் ஜிஎஸ்டி கார ணமாக அதன் அதிகாரிகள் தேவை குறைந்துள்ளது. 7-ஆவது ஊதியக் குழுவில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக் கடியுடன் வேறு சில காரணங்கள் இருக்கும்போதிலும், காலிப் பணி யிடங்களை நிரப்புவதும் அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இவை இரண்டையும் சமன்செய் யும் விதமாக, ஆண்டுதோறும் குடிமைப் பணிகளுக்காக புதிய கொள்கை முடிவு தயராகி வருகி றது என அவர்கள் தெரிவித்தனர்.

யுபிஎஸ்சி தேர்வில் கடந்த ஆண்டு 980 பணியிடங்கள் அறி விக்கப்பட்டிருந்தன. அதேபோல், 2016-ல் 1079, 2015-ல் 1129 மற்றும் 2014-ல் 1291 என்ற வீதத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந் தன. இவ்வாறு, கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஎஸ்சி-க்கு அறிவிக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபடி உள் ளன. இதனால், பல ஆண்டு களாகவே பல்வேறு மாநிலங் களுக்கு தேவையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப் படாமல் உள்ளன.

உதாரணமாக, உத்தரபிரதேசத் தில் 110 ஐஏஎஸ் பணியிடங்களும், பிஹாரில் 107 இடங்களும் காலியாக இருக்கின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் 94, ஜார்கண்டில் 75 மற்றும் கர்நாடகாவில் 63 என்ற வீதத்தில் ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x