Published : 25 Aug 2018 08:47 PM
Last Updated : 25 Aug 2018 08:47 PM

பெயரை மாற்றாதீர்கள், பிரதமரை மாற்றுங்கள் ஓட்டுக்கள் கிடைக்கும்: கேஜ்ரிவால் கிண்டல்

மறைந்த மூத்த பாஜக தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பெயரை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்துக்கு சூட்ட பாஜக பரிசீலித்து வருவதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இதனை ‘பயனளிக்காத வாக்கு வங்கி அரசியல்’ என்று தாக்கியுள்ளார்.

மறைந்த தலைவர் வாஜ்பாயின் பெயரை சில இடங்களுக்குச் சூட்டி பாஜக வாக்குவங்கி அரசியல் நடத்துவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தனது ட்விட்டரில், “ராம்லீலா மைதானத்தின் பெயரை வாஜ்பாய் பெயராக மாற்றுவதனால் வாக்குகள் விழாது, பாஜக பிரதமரின் பெயரை மாற்றினால் ஒருவேளை வாக்குகள் விழலாம். ஏனெனில் மக்கள் அவர் பெயரில் வாக்குகள் அளிப்பதில்லை” என்று கிண்டல் செய்துள்ளார்.

ஆனால் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவரி, வடக்கு டெல்லி நகராட்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா இருவருமே ராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றும் உத்தேசம் இல்லை என்று மறுத்தனர்.

மனோஜ் திவாரி, இது ‘பொய்களைப் பரப்பும் முயற்சி’ என்று கூறிஉள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x