Last Updated : 27 Aug, 2018 08:24 PM

 

Published : 27 Aug 2018 08:24 PM
Last Updated : 27 Aug 2018 08:24 PM

மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்த அரசியல் கட்சிகளின் கவலைகள் பரிசீலிக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் பேட்டி

மக்களவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை கவனத்தில் கொள்வோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிற்பகுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் சட்டப்பேரவைத்தேர்தலும், ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலும் நடக்கின்றன. இந்தத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராவது குறித்தும், அவர்களின் கருத்துக்கள், பரிசீலனைகள், பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வைத்த பல்வேறு ஆலோசனைகள், கருத்துக்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பெரும்பாலானவை மின்னணு வாக்கு எந்திரம் தேவையில்லை, மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதேசமயம் மற்ற கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டும். வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தைத் தேர்தலில் அதிகம் பயன்படுத்தினால், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று சிலகட்சிகள் வலியுறுத்தினார்கள்.

அதன் பின் கூட்டம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு மனநிறைவான முறையில் தீர்வு ஏற்படுத்திக்கொடுப்போம். அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி முழுமையான முடிவு எடுப்போம்.

ஆனால், சில கட்சிகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கே திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மோசமானது. இந்த முறையால், மீண்டும் வாக்குப்பதிவு மையங்களைக் கைப்பற்றும் சூழலுக்குச் செல்லும். அதை நாங்கள் விரும்பவில்லை.

அதேசமயம், சில கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருக்கும் குறைபாடுகளைக் கூறினார்கள். அதிகமான அளவில் வாக்குப்பதிவு ஒப்புகைசீட்டு எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளும்.

இவ்வாறு ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x