Published : 07 Aug 2018 10:17 AM
Last Updated : 07 Aug 2018 10:17 AM

மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்

மும்பை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் தாக்குதலில் சிக்கி, கடற்கரையில் பொழுதுபோக்குவதற்காக வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் காயமடைந்தனர்.

பொதுவாக ஆழ்கடலில் காணப்படும் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள், தென்மேற்கு பருவமழை காலத்தில் மும்பை கடற்கரை பகுதிக்கு வருகின்றன. இந்த வகை ஜெல்லி மீன்கள் தாக்கினால் மனிதர்களுக்கு கடுமையான சொறி, ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் மும்பை ஜுகு கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக ஜெல்லி மீன்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. கடற்கரைக்கு பொதுபோக்குவதற்காக வந்தவர்கள், சுற்றுலா பயணிகள் என 150க்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அங்கு கடை வைத்துள்ளவர்கள் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு நாட்களாகவே கடற்கரை முழுவதும் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. ஜெல்லி மீன்கள் பற்றி தெரியாத பலர் இதன் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர். பலருக்கு உடல் அரிப்பு, ஒவ்வாமை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்’’ எனக் கூறினார்.

மும்பை கடற்கரைக்கு ஜெல்லி மீன்களின் வருகை வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை அதிகமான அளவு ஜெல்லி மீன்கள் வருவதாக கூறப்படுகிறது. ஜுகு மட்டுமின்றி மும்பையில் உள்ள மற்ற கடற்கரைகளிலும் ஜெல்லி மீன்கள் தாக்கி பலர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x