Last Updated : 30 Aug, 2018 04:25 PM

 

Published : 30 Aug 2018 04:25 PM
Last Updated : 30 Aug 2018 04:25 PM

உயிரைக் காப்பாற்றுவதும் கடமைதான்: மாரடைப்பில் அவதியுற்ற வாகன ஓட்டுநருக்கு உதவிய ‘தானே’ போலீஸ்

போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தனது பணிகளுடைக்கிடையே சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஓட்டுநர் ஒருவர் திடீரென மாரடைப்பில் அவதியுற்றபோது அவரது உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் மும்பை அருகே தானே மாவட்டம் காரிகான் சுங்கச்சாவடி அருகே நேற்று மதியம் நடைபெற்றது.

ஒரு உயிரைக் காப்பாற்றுவதும் தனது கடமையென செயல்பட்ட முண்டே எனும் காவலரின் செயல் குறித்து குறித்து தானே போலீஸார் தெரிவித்ததாவது:

நிகில் தாம்போல் (23) என்பவர் பட்காவிலிருந்து தானே நகரத்திற்கு தனது தந்தையுடன் காரில் வந்துகொண்டிருந்தார். மதியம் 12.30 மணிவாக்கில் காரிகான் சுங்கச்சாவடிக்கு அவர்களின் கார் வந்தது. கார் ஓட்டிவந்த தாம்போல் திடீரென மாரடைப்பு வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தார்.

கால்வா போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த காவலர் பண்டாரிநாத் முண்டே (35). அருகாமையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதைப் பற்றி அவருக்குத் தெரிய வந்தவுடன் ஒருநிமிடம்கூட நேரத்தைக் கடத்தாமல் அதே காரில் அவரைப் பின்பக்கம் அமரவைத்துக்கொண்டு, தானே நகரத்தின் ஜூபிடர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

வேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  மருத்துவர்களும் அவசர சிகிச்சை மேற்கொண்டநிலையில் தாம்போல் காப்பாற்றப்பட்டார்.

போக்குவரத்து துணை காவல் ஆணையர் அமித் காலே, துரித கதியில் இயங்கி ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர் முண்டேவை அழைத்துப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x