Published : 26 Aug 2018 03:20 PM
Last Updated : 26 Aug 2018 03:20 PM

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்; இந்தியர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி புகழாரம்

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், அதனை எண்ணி இந்திய மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று வானொலியில் மனதில் இருந்து பேசுகிறேன் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார், அந்த வகையில் 45 மன்கிபாத் நிகழ்ச்சியில் இன்று மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நம்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பவர்களை வாழ்த்துகிறேன். இந்த மகத்தான பணியில் மூலம் பெரும் சமூகத்தின் வரலாற்றுக்கு தொண்டாற்ற முடியும்.

ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. அதன் பழமையால் தனிச்சிறப்புடன் திகிழ்கிறது. உலகின் மிக பழமையான மொழி தமிழ். இதை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது. வேதகாலத்தில் இருந்து தற்போதைய நவீன காலம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் நன்கு அறிவோம். உலகம் முழுவதும் அறிவை பரப்பியதில் சமஸ்கிருதுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும்.

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் நடந்து முடிந்துளளது. மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x