Published : 04 Aug 2018 03:15 PM
Last Updated : 04 Aug 2018 03:15 PM

பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் காக்பிட் பகுதிக்குச் செல்ல முயன்றவர் கைது

புதுடெல்லியை நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தின் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரிலிருந்து புதுடெல்லிக்கு நேற்று இரவு AI 138 விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் பயணித்த குர்பிரீத் சிங் தனது விதிமீறல் நடத்தைக்காக கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவர் மிலனுக்கே திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மிலனுக்கு வந்தவுடன் அவர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு பிறகு ஏர் இந்திய விமானம், விமானப் போக்குவரத்து நடைமுறைகளில் ஒன்றான 'முழுமையான பாதுகாப்பு அனுமதி' மீண்டும் பெற்று புதுடெல்லியை அடைவதற்கு வழக்கமான நேரத்தைவிட கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் அதிகமானது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,

''விமான நிலையத்திலிருந்து AI 138 விமானம் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியபிறகு, குர்ப்ரீத் சிங் எனும் பயணி காக்பிட் பகுதிக்கு செல்ல முயன்றார்.

இவரது விதிமீறல் நடத்தையால் விமானம் திரும்பவும் தரையிறங்கி அவரை போலீஸில் ஒப்படைத்தது. இதனால் விமானம் புதுடெல்லியை வந்தடைய 2 மணி 37 நிமிடங்கள் காலதாமதமானது.

AI 138 விமானத்தின் கேப்டன், 250 பயணிகள் விமானத்தில் இருந்தநிலையில், டெல்லிக்கு சென்றபிறகு (டெல்லிக்கு எட்டு மணி நேர பயணம்) அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து. மிலனுக்கு நாடு திரும்ப போதுமான வெளிச்சம் தேவைப்படும் என்பதால் மீண்டும் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தார். ''

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x