Published : 28 Aug 2018 08:31 AM
Last Updated : 28 Aug 2018 08:31 AM

வேளாண் தொழில்நுட்பம் பற்றி அறிய ஜார்க்கண்ட் விவசாயிகள் 26 பேர் இஸ்ரேல் பயணம்

வேளாண் துறை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக, ஜார்க் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 26 விவசாயிகள் அடங்கிய குழு நேற்று முன்தினம் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றது. இக்குழுவில் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளார்.

இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பு விவசாயிகள் குழுவினர் மத்தியில் முதல்வர் ரகுவர் தாஸ் பேசும்போது, “பூகோள ரீதியாக பார்க்கும்போது ஜார்க்கண்டை விட சிறியது இஸ்ரேல். ஆனால் இந்தியாவைவிட அங்கு சராசரி தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் தொழில்நுட்ப பயன்பாடுதான். எனவே, வேளாண் துறையில் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் கற்றுக்கொண்டு வாருங்கள். இங்கு வந்த பிறகு அந்த நடைமுறைகளை உங்கள் நிலத்தில் பயன்படுத்துங்கள்.

தானிய உற்பத்தியில் இப்போது நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். ஆனால், தானிய உற்பத்தியில் நம் மாநிலம் தன்னிறைவு பெறுவதுடன் பிற மாநிலங்களுக்கும் வழங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. விவசாயம் மட்டுமல்லாது, செயற்கை முறை மீன் வளர்ப்பு, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும்” என்றார்.

இந்த 4 நாள் பயணத்தின்போது, அங்குள்ள பால் பண்ணைகள், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி மையங்களை விவ சாயிகள் பார்வையிடுவதுடன் சொட்டு நீர்ப் பாசன செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்வார்கள் என மாநில வேளாண் துறை செயலாளர் பூஜா சிங்கால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x