Last Updated : 19 Jul, 2018 11:37 AM

 

Published : 19 Jul 2018 11:37 AM
Last Updated : 19 Jul 2018 11:37 AM

4,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சகம்

2018-19 ஆம் ஆண்டுக்குள் 4,100 கிமீ இருப்புப் பாதைகள் அமைக்கும் பணி நிறைவேற்றப்படும் என்று ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜேன் கோஹெயின் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:

2018-19 ஆம் ஆண்டுக்குள் 4,100 கிமீ இருப்புப் பாதைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1000 கி.மீ., புதிய பாதைகளும் உள்ளடக்கம். இதில் 1,000 கிலோ மீட்டர் அகலப் பாதையாக மாற்றுவதற்கும் மற்றும் 2,100 கி.மீ. நீளத்தில் இரட்டை ரயில் பாதையாக மாற்றவுதும் அடங்கும்.

திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்யவும் பாதை அமைப்பதில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதில் நில ஆர்ஜிதம், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் நலத்துறையினரின் அனுமதி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், பயன்பாட்டு இடமாற்றங்கள் போன்ற பல்வேறு சிக்கல்களைப் பற்றி பேசவும் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளோடு ஒரு தொடர்ச்சியான கூட்டத்திற்கு ரயில்வே துறை ஏற்பாடு செய்து வருகிறது.

ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக எல்ஐசியின் நிதியுதவி அளித்துள்ளது. ரயில்வேயின் முக்கிய திட்டங்களான திறன் விரிவாக்கத் திட்டங்கள், கடைசி மைல் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை நிறைவேற்றி ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக நிறுவன நிதியளிப்பாக எல்.ஐ.சியிடமிருந்து கடன்தொகை ரூ.1.5 கோடி பெற்றப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறை சார்பாக நடைபெறும் இருப்புப் பாதை அமைக்கும் பணி விவரம் நாள் ஒன்றுக்கு: 2015-16ல் 7.75 கி.மீ., 2016-17ல் 7.82 கி.மீ. மற்றும் 2017-18ல் 5.10 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டது. இந்த அளவு 2018-19ல் மாறுகிறது. நாள் ஒன்றுக்கு 11.23 கி.மீ. தொலைவில் நடைபெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x