Published : 22 Jul 2018 03:46 PM
Last Updated : 22 Jul 2018 03:46 PM

அமித் ஷா கண்காணிப்பில் 1,800 ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள்: தேர்தல் பணிக்கு தயாராகும் பாஜக

 மக்களவை தேர்தலுக்கு பாஜக நிர்வாகிகளை தயார் படுத்தவும், மக்களுக்கு பாஜக தொடர்பான தகவல்களை கொண்டு சேர்க்கவும், அமித் ஷாவின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் வகையில், பாஜக சார்பில் 1,800 ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை பாஜக ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நாடு முழுக்க கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

ஒவ்வொரு மாநிலங்களிலும், வாக்குச்சாவடி வாரியாக கட்சி நிர்வாகிளை சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்ப்படுவதாக கட்சி நிர்வாகிகள் அமித் ஷாவிடம் தெரிவித்தனர்.

எனவே பாஜக ஆதரவு தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இதன்படி பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆதரவு வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 1,800 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அனைத்து குழுவிலும் அமித் ஷாவும் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் அனைத்து தகவல்களும் இந்த வாட்ஸ் ஆப் குழுவில் ஷேர் செய்யப்படும்.

இதனை மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக நிர்வாகிகள் தங்கள் தொடர்பில் உள்ள அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களிலம் பகிருவர். முக்கிய தகவல்கள் இருந்தால் அதனை பாஜக அல்லாத மக்கள் சார்ந்த வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பகிரப்படும். இதன் மூலம் அகில இந்திய அளவில் பாஜகவி தொண்டர்கள், நிர்வாகிகள் செயல்பாடுகளை அமித் ஷா கண்காணிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x