Last Updated : 31 Jul, 2018 05:04 PM

 

Published : 31 Jul 2018 05:04 PM
Last Updated : 31 Jul 2018 05:04 PM

சுவாமி கயானானந்த் சொற்பொழிவுக்கு கண்டிப்பாக வரவேண்டும்-- பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் விநோத உத்தரவிட்ட அதிகாரி

ஹரியானாவில் மாவட்ட அதிகாரி ஒருவர் ஆன்மிகவாதி ஒருவரின் சொற்பொழிவுக்கு அனைத்து சர்பார்ஞ்களும் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

குருஷேக்ராவில் இருந்து இயங்கிவரும் குளோபல் இன்ஸ்பிரேஷன் அன்ட் என்லைட்டன்மெண்ட் ஆர்கனைசேஷன் ஆப் பகவத் கீதா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி கயானானந்த் சொற்பொழிவுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களையும் பஞ்சாயத்து செயலாளர்களையும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டுமென பிவானி மாவட்ட வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரி ராம்சிங் உத்தரவிட்டுள்ளார்.

டிடிபிஓ (மாவட்ட வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரி), ஜூலை 25 அன்று வட்டார வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலர்களுக்கு அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் ஜூலை 30 (திங்கள்) கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர்களோ அல்லது பஞ்சாயத்து செயலாளர்களோ, தவிர உள்ளூர் கவுன்சிலர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள பணியாளர்கள் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி ஹரியானா சான்ஸ்கிரிட் அகாடமியில் நேற்று நடைபெற்றது.

டிடிபிஓ தனது சுற்றறிக்கையில், பஞ்குலாவில் உள்ள ஹரியானா சான்ஸ்கிரிட் அகாடெமி இந்நிகழ்ச்சியை கிராமங்களுக்காகவென்றே ஏற்பாடு செய்துள்ளது.

''நல்ல சிந்தனை, கலாச்சாரம், மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல்'' போன்ற அம்சங்களை உள்ளடக்கி சுவாமி கயானானந்த் ஜி மஹராஜ் சிறந்த சொற்பொழிவு ஆற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினை குறித்து உதவி ஆணையர் ஆன்ஷாஜ் சிங்கிடம் பேசுகையில், ''டிடிபிஓ என்னை தொடர்புகொள்ளவில்லை. இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் இதுபற்றி விசாரித்து தெரிந்துகொள்கிறேன். ஆனால் இந்நிகழ்ச்சி நிச்சயம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை'' என்று தொலைபேசியில் தெரிவித்தார்.

ஹரியானாவின் எதிர்க்கட்சியான இந்தியன் நேஷ்னல் லோக் தள், டிடிபிஓ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அது ஒரு ஆன்மிக சொற்பொழிவு. அதற்கு ஒரு அரசு அதிகாரி அதிகாரபூர்வமான அறிவிப்புகளையோ உத்தரவுகளையோ எப்படி வழங்க முடியும். ஆனால் இந்த டிடிபிஓ அப்படி செய்ததன்மூலம் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஐஎன்டிஎல் கட்சியின் தலைவர் ஆர்.எஸ். சவுத்தரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x