Published : 31 Jul 2018 08:59 AM
Last Updated : 31 Jul 2018 08:59 AM

பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி

மகாராஷ்டிராவில் ராய்காட் பஸ் விபத்தில் அண்மையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ரத்னகிரி மாவட்டம், தபோலியில் வேளாண் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சதாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வரர் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக் கிழமை ராய்காட் மாவட்டம், அம்பேனலி காட் பகுதியில் இவர்களின் பஸ் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி ஆழ பள்ளத் தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்த னர். ஒருவர் மட்டுமே காயத்துடன் உயிர் தப்பினார்.

இதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

இந்நிலையில் அம்மாநில அமைச்சர் ரவீந்திர வைக்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வந்தது.

இறந்தவர்களில் முழுநேர ஊழியர்களாக பணியாற்றிய 23 பேரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கப்படும். மற்றவர்களின் வாரிசுகளுக்கும், சிறப்பு நிகழ்வாக கருதி ஏதேனும் அரசுப் பணி வழங்கப்படும்” என்றார்.

இதனிடையே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தின ருக்கு சிவசேனா சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என நேற்று அறிவிக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x