உத்தர பிரதேசத்தில் 13.39 கோடி வாக்காளர்கள்

உத்தர பிரதேசத்தில் 13.39 கோடி வாக்காளர்கள்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி முதல் எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதன்பிறகு ஜனவரி 6-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 12.55 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 13.39 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 84 லட்சம் பேரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக 2.04 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேசத்தில் 13.39 கோடி வாக்காளர்கள்
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in