Last Updated : 28 Jun, 2018 08:56 AM

 

Published : 28 Jun 2018 08:56 AM
Last Updated : 28 Jun 2018 08:56 AM

அமர்நாத் புனித யாத்திரை உற்சாகத் தொடக்கம்: 2,995 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது

அமர்நாத் மலையில் இயற்கையாகவே அமையும் பனிலிங்கத்தைத் தரிசிக்க 2,995 பக்தர்கள் அடங்கிய முதல் குழு ஜம்முவிலிருந்து நேற்று அதிகாலை உற்சாகமாக புறப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் அமர்நாத் மலையில் 3,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது.

இந்த நிலையில் நேற்று பனிலிங்கத்தைத் தரிசிக்க முதல் குழு, ஜம்மு பாக்வதி நகர் மலையடிவார முகாமிலிருந்து உற்சாகமாகப் புறப்பட்டுள்ளது. ஆளுநர் என்.என். வோராவின் ஆலோசகர்கள் கே.விஜயகுமார், பி.பி.வியாஸ் ஆகியோர் பக்தர்கள் செல்லும் வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். 107 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிளில் பக்தர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கி யுள்ளனர்.

2,334 ஆண்கள், 520 பெண்கள், 21 குழந்தைகள், 120 சாதுக்கள் என மொத்தம் 2,995 பேர் அடங்கிய குழுவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மற்றொரு மலையடிவாரத்தில் அமைந்துள்ள 2 முகாம்களை அடையும். அங்கிருந்து பஹல்காம் வழியாக 1,904 பக்தர்களும், பல்தால் வழியாக 1091 பக்தர்களும் செல்லவுள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

உள்ளூர் போலீஸார், ராணுவப் படையினர், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி ஆகிய துணை ராணுவப் படையினர் உட்பட மொத்தம் 40 ஆயிரம் பேர் பக்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x