

கவுகாத்தி: அசாமில் துர்கா பூஜைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், துர்கா பூஜை நடைபெறும் பந்தல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஆன்டி-ரோமியோ ஸ்குவாட்ஸ் எனப்படும் ரோமியோ எதிர்ப்பு படை 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று கச்சார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நியுமல் மகாட்டா தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை பந்தல்களில் பெண்கள் மற்றும் குழந்தை களிடம் நடைபெறும் அத்துமீறல் களை தடுக்க ரோமியோ எதிர்ப்பு படை பயன்படுத்தப்பட உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்சனை என்றால் உடனடி இந்த படை நடவடிக்கை எடுக்கும்.