Published : 12 Jun 2018 09:11 AM
Last Updated : 12 Jun 2018 09:11 AM

ட்விட்டரில் தவறான படம் வெளியிட்டு மன்னிப்பு கோரினார் திக்விஜய் சிங்

ட்விட்டர் பக்கத்தில் தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மன்னிப்புக் கோரினார்.

திக்விஜய் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் ஒரு ரயில்வே பாலத்தின் படத்தை வெளியிட்டு, இது மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரிலுள்ள சுபாஷ் நகர் ரயில்வே பாலமாகும். தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூணில் விரிசல்கள் உள்ளன. இதன்மூலம் ரயில்வே பணிகளின் தரம் குறித்து கேள்விகள் எழுகின்றனஎன்று கருத்துகளை பதிவு செய்திருந்தார் திக்விஜய் சிங். அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் ரயில்வே பாலத்தின் தூணில் விரிசல்கள் இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் ட்விட்டரில் திக்விஜய் சிங் வெளியிட்ட புகைப்படமானது, தவறான புகைப்படம் என்றும், அது பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாகாணத்திலுள்ள மெட்ரோ ரயில் பாலத்தின் படம் என்றும் ஒரு இணையதளம் வெளி யிட்டுள்ளது.

இதையடுத்து தனது தவறை உணர்ந்த திக்விஜய் சிங் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். தகவல்களை சரிபார்க்காமல் படத்தை வெளியிட்டது தவறுதான். எனது நண்பர் ஒருவர் இதை அனுப்பியிருந்தார் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல கடந்த வாரம் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சகதியான தண்ணீரில் ரயில்வே ஊழியர்கள் கேண்டீன் பாத்திரங்களைக் கழுவும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலுள்ள உணவகத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷபானா தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x