Last Updated : 02 May, 2018 04:08 PM

 

Published : 02 May 2018 04:08 PM
Last Updated : 02 May 2018 04:08 PM

உலக அளவில் ஃபேஸ்புக் புகழில் பிரதமர் மோடிக்கு முதலிடம்: ட்விட்டரில் டிரம்ப் முன்னணி

 ஃபேஸ்புக்கில் உலக அளவில் அதிக அளவு பின்தொடரப்படும், புகழ்பெற்ற தலைவராக, பிரதமர் மோடி திகழ்கிறார். அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்பைக் காட்டிலும் மோடியின் புகழ் வளர்ந்துவிட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் பிரதமர் மோடியும் உள்ளனர்.

சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை 4.32 கோடி பேர் பின்தொடர்கின்றனர். ட்விட்டரில் மோடியை  2.31 கோடி பேர் பின்தொடர்கின்றனர். ஆசிய அளவிலும் அதிக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் இருக்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவை நகரைச் சேர்ந்த புர்சன் கோன் அன்ட் உல்ப் என்ற நிறுவனம் ஃபேஸ்புக்கில் உலகத் தலைவர்கள் என்ற தலைப்பில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வுக்காக 14 மாதங்கள் அந்த நிறுவனம் செலவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களின், அமைச்சர்களின் 650 ஃபேஸ்புக் பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஃபேஸ்புக்கில் எந்த உலகத் தலைவர் குறித்து அதிக அளவு பேசப்படுகிறது என்பது குறித்து 24.49 கோடி பதிவுகள், லைக், பகிர்தல் ஆகியவற்ற ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இதில் மோடி மட்டும் 11.36 கோடி பேரிடம் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ 4.6 கோடி மக்களிடம் தொடர்பு கொண்டுள்ளார். கம்போடியா பிரதமர் சாம்டெக் ஹன் சென், 3.6 கோடி தொடர்பும், அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மெக்ரி 3.34 கோடி பேரிடமும் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதில் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்புக்கு கடந்த 14 மாதங்களில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் 20.49 கோடி கமென்ட்கள், லைக்குகள், ஷேர்கள் கிடைத்துள்ளன. ஆனால், மோடிக்கு 11.36 கோடி கமென்ட்கள், லைக்குகள், ஷேர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் நாள் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே கருத்துகளை, தகவல்களைப் பதிவு செய்கிறார். ஆனால், பிரதமர் மோடி அவரின் பதிவுகளைக் காட்டிலும் இருமடங்கு பதிவுகளைப் பதிவு செய்கிறார்.

இதில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி அதிகமான அளவு நேரலை நிகழச்சிகளில் பேசுவதை நியூசிலாந்து பிரதமர் ஜேக்கின்டா ஆர்டெர்ன் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரின் கார் பயணத்தின் போதும், வீட்டில் இருக்கும் போதும், அலுவலகத்தில் இருக்கும்போதும் நேரலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதுமட்டுமல்லாமல் உலக அளவில் ஃபேஸ்புக்கில் மிகவும் விரும்பப்படும் தலைவராகவும் ஜேசின்டா ஆர்டெர்ன் திகழ்ந்து வருகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x